பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/525

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

527 காப்பாற்றியருளிய இடையர்கள் தலைவனை-அமரர்கள் தலைவனை-அழகிய தமிழ்ப் பாட்டாய் விளங்குபவனைஅழகிய வடமொழிப் பாசுரமாய் இலங்குபவனை-பற்றற்ற முனிவரர்கள் இடைவிடாது நினைக்கும் அரங்கத்துப் பள்ளி கொண்டருளும் அரங்கநாதனை நாக்குத் தடிக்கும்படி துதித்து, மலர்களிட்டு அருச்சித்துக் கைகள் கூப்பி வணங்கும் நாள் எந்நாளோ என்கிறார் ஆழ்வார். (5) - தும்புரு நாரதர் முதலிய முனிவர்கள் பெரிய பெருமாளின் திருக்கலியாண குணங்களை இனிய இசை யுடன் வீணையிலிட்டுப் பாடிக் கொண்டும், நான்முகன் நான்கு முகங்களாலும் நான்கு வேதங்களை ஒதிக் கொண்டும் வணங்கப், பள்ளி கொண்டிலங்கும் எம் பெருமானைக் கண்டு வணங்கி என்னுடைய பூமாலை யணிந்த தலையானது அவன் திருவடியினை முடிசூடப் பெறுதலும் என்றைக்கு வாய்க்குமோ என்கிறார் குலசேகரர். (6) வண்டுகள் படிந்திருக்கிற தாமரைப் பூவில் தோன்றிய பிரமனும், சிவனும், இந்திரனோடு கூட மற்றைத் தேவர்களின் திரளும், அரம்பை முதலிய தேவ மாதரும், மற்றுமுள்ள தெளிந்த ஞானத்தையுடைய முனிவர்கள் குழாமும், ஒருவர்க்கொருவர் நெருக்கித் தள்ளி, பார்க்குமிடமெல்லாம் மலர்களை இறைத்துக் கொண்டு வந்து சேர்தற்கு இடமான-தேன் மிக்க மலர் களையுடைய சோலைகளை யுடைத்தான கோயிலிலே திருவனந்தாழ்வான் மீது பள்ளி கொண்டு திருக்கண் வளர்ந்தருளும் கடல் போலும் வடிவினரான பெரிய பெருமாளுடைய செந்தாமரை போன்ற திருக்கண்களை யும், ஒளியையுடைய சந்திரன் போன்ற திருமுக மண்டலத்தையும் கண்டு என்னுடைய மனமானது மிகவும் உருகுகின்ற நாள் என்றைக்கு வாய்க்குமோ என்று ஏங்கு கின்றார் ஆழ்வார்.