பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/526

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

528 (7) .ெ கா டு ைம ய ர ல் விளங்கும் மனத்தை யொழித்து, வஞ்சனைகளைப் போக்கி, கொடிய புலன் களை அடக்கி, மேன்மேலும் துன் பந் தரும் பழவினைகளை வேரறுத்து, ஐ ந் து பொழுதுகளிலும் ஆண்டவனை வணங்கி வாழும் வைணவ பக்தர்களுக்குக் கதியாக விளங்கும்-காவிரியால் அழகுண்டான திருக்கோயிலிலே பாம்பனையில் பள்ளி கொள்ளும் அழகு விளங்கா நிற்கும் மாயோனை எனது கண்கள் கண்டு தொழுது, ஆனந்தக் கண்ணிர் ததும்பும்படி நிற்பது என்றைக்கோ' என்று அகநெகிழ்ந்து ஆழ்வார் உரைக்கின்றார். (8) :அம்புகளோடு கூடிய பெரியதான சார்ங்கம் என்னும் வில்லும், வளைந்த நல்ல பாஞ்ச சன்னியம் என்ற சங்க மும், எதிரிகளைக் கொலை செய்யவல்ல சக்கரமும், பகைவர்களுக்குக் கொடுந்தொழில் புரிகின்ற கெளமோதகி என்னும் கதையும், வெற்றி பெற்று ஒளி மிக்க நந்தகம் என்னும் வாளும், காற்றுப் போலக் கடிய நடையையுடைய பெரிய திருவடி என்னும் பெயரையுடைய கருடாழ்வாரும் ஆகிய இவையெல்லாம் நாற்புறமும் சூழ்ந்து கொண்டு பெரிய பெருமாளுக்குக் காவலாக இருக்க, மீன்கள் நிரம்பிய விசாலமான கழனிகளாலும் சோலைகளாலும் சூழப்பட்ட திருவரங்கத்துப் பாம் பனையில் பள்ளி கொள்ளும் எம்பெருமானை கொடிய வினையேனாகிய நான் கண்டு வணங்கி மகிழ்ந்து வாழும் நாள் என்றைக்கு வாய்ப்பதோ' என்கிறார் ஆழ்வார். (9) ஒரு நாளும் திருப்தி கொள்ளாத ஆசை கொண்ட மனத்தினரான வைணவ அடியார் குழாத்துள் கூடி, எம். பெருமானது பெருமைகள் பலவற்றையும் பரக்கப் பாடி, அவ்வளவிலும் அமையாத மனக் களிப்போடு அழுத கண் களினின்றும் நீர்த்துளிகள் மழைபோல் பெருகி வர, எம். பெருமானை நினைத்து மனமுருகித் துதித்து, எப்போதும் இசைக் கருவிகளினின்றும் எழும் இன்னோசை கடலோசை போன்று முழங்கும் திருவரங்கத்தில் பாம்பணையில் பள்ளி