பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/527

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

529. கொள்ளும் பகைவரோடு பொருவதையே தொழிலாக வுடைய திருவாழியினைக் கைக்கொண்ட எம்பெரு மானைக் கண்டு வணங்கித் தலை கால் தெரியாமல் துள்ளிக் கூத்தாடி பூமியிலே உடம்பு தெரியாமல் புரளும் நாள் என்று வாய்க்குமோ என்கிறார் ஆழ்வார். (10) 'தேவர்கள் வாழவும், மண்ணுலகில் உள்ளார் வாழவும், மிக்க துன்பத்தை விளைவிப்பதான பாவங்கள் நீங்கவும், துக்கம் கலவாத சுகம் வளரவும், எப்போதும் மனத்தில் மகிழ்ச்சியை இருப்பிடமாகக் கொண்ட வைணவ பக்தர்கள் வாழவும், திருவுள்ளத்தில் உகப்போடு தெற்குத் திசை இலங்கை நோக்கிப் பள்ளி கொண்டருளா நின்ற அரங்கநாதனுடைய திருச்சந்நிதி முற்றத்திலே திளைக் கின்ற பாகவதர்களுடைய குழாத்துள் சேர்ந்து அடியேனும் அவர்களைப் போலே திளைத்து வாழ்ந்திருக்கும் காலம் எப்போது வந்து வாய்க்குமோ என்று குலசேகரர் உளங் குழைகின்றார். (11) மணற் குன்றுகள் விளங்கா நின்ற கரையை யுடைய காவிரியின் நடுவிடத்து, திருவரங்கத்து அரவணை யில் பள்ளி கொள்ளும் கடல் போல் விளங்குகின்ற கரிய திருமேனியையுடைய பெரிய பெருமாளை கண்கள் திருப்தியடையும்படி கண்டு வணங்கி மகிழ வேண்டும் என்று ஏற்பட்ட ஆசையால் வெண்கொற்றக் குடையும், வீரம் மிக்க சேனையும், வெற்றியும் ஒளியும் பொருந்திய வாளையும் உடையவருமான-மதுரையில் உள்ளவர்க்குத் தலைவரும், .ெ க ா ைட க் குணம் உடையவருமான குலசேகரப் பெருமாள் அருளிச் செய்த தமிழ் நடையானது நன்கு விளங்கா நின்ற தமிழில் அமைந்த இப் பத்துப் பாசுரங்களையும் ஒதவல்லவர்கள் நலம் நல்கும் நாராயண னுடைய திருவடிகளில் சேரப் பெறுவர். இரண்டாந் திருமொழி-தேட்டருந்திறல் திருமால் வழிபாட்டினும் திருமாலின் அடியார் வழிபாடு சிறந்ததெனக் குலசேகரர் எண்ணினர் என்றும், சே. செ. இ.34