பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/528

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

530. _1

  • உள்ளும் புறமும் ஒன்றுபட்டு, உயிர்களிடை ஆண்டவனைக் கண்டு, உவந்து, வழிபாடு செய்வதைத் திருமாலின் அடியவரிடைப் பரப்பியவர் குலசேகரரே ஆவர்' என்றும் அறிஞர் கூறுவர்.'

திருவரங்கப் பெருமானது திருமுற்றத்து மெய்யடியார் பால் குலசேகரர் கொண்ட அளவு கடந்த ஆராத மனக் காதலை இரண்டாந் திருமொழி இனிதுறக் கிளத்து கின்றது. உள்ளுறை பொருள் (1) தன் முயற்சியால் தேடிப் பெறுதற்கு அருமை யானவனும், வலிவைக் கொடுப்பவனும், தேன் போல் இனிப்பவனும், தென் திருவரங்கத்தில் வாழ்பவனும், பெரிய நாச்சியார் நீங்காது உறையும் செவ்வி பெற்றி ருக்கிற வன மாலையை அணிந்துள்ள திருமார்பினையுடை யவனுமான அரங்கநாதனை வாழ்த்தி, அவன் திறத்துப் பித்தேறிய மனத்தினராய், ஆடிப்பாடி அகமகிழ்வதிலே ஒருப்பட்டு, அவன் திருப்பெயர்களை வாய்விட்டுக் கதறிக் கூப்பிட்டு இளைப்படைகின்ற உண்மையான அன்புடைய பாகவதர்களின் குழுவினைக் கண்டு வணங்கப் பெற்றே னாயின் அதுவே யான் கண் படைத்ததற்குப் பயன் ஆகும் என்கிறார் குலசேகரர். (2) தாமரைப் பூவிற் பிறந்த பிராட்டியினது திருத் தோள்களைத் தழுவி முயங்கியதும் புகரையுடைய அம்பினால் நீண்ட மாமரத்தினைத் துளை செய்து தள்ளி யதும், பசுக் கூட்டங்களை மேய்த்ததும் ஆகிய செயல் களையே இடைவிடாது நினைந்து ஆடிப்பாடி அரங்கனே: என்று அவன் திருநாமங்களைச் சொல்லிக் கூப்பிடுகின்ற தொண்டர்களின் திருவடித் தூள்களிலே நாம் ஆடப் பெற் - 47. திரு. தெ. பொ. மீனாட்சிசுந்தரனார் ட குல சேகர் ப. 46, 47. . . . .