பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/529

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாற் பின் கங்கையாற்றிலே நீர் குடைந்து ஆடும் ஆசை யானது எற்றுக்கு' என்று கேட்கிறார் ஆழ்வார். - (3) நப்பின்னை பொருட்டு ஏழு இடங்களை வலி யடக்கியதும், வராக அவதாரம் எடுத்துப் பூமியைக் கோட்டாற் குத்தியெடுத்ததும், முன்பு சக்கவர்த்தித் திருமகனாய்ப் பிறந்து பகைவரை வேரோடு கெல்லி யெறிந்ததும், திருவிக்கிராமவதாரம் எடுத்து உலக ளந்ததும் ஆகிய செயல்களை வாயாற் சொல்லி வாய் விட்டுப் பாடி, காவிரியாறு நீர் சுரப்பது போன்று கண்களில் |lர் பெருக்கி, அரங்கன் திருக்கோயில் முற்றத்தைச் சேறாக்குகிற தொண்டர்களின் திருவடிகளால் மிதிக்கப் பெற்றுத் துகையுண்ட அழகிய சேற்றை என் நெற்றிக்குத் திலகமாகக் கொள்வேன்' என்று குலசேகரர் குன்றாக் களிப்புடன் கூறுகின்றார். (4) தோய்த்துக் குளிர்ந்த தயிரையும், வெண்ணெ யையும், பாலையும் ஒரே காலத்தில் அமுது செய்த அளவில் அன்னை யசோதைப் பிராட்டி அக்களவினைப் பார்த்துக் கோபித்துப் பிறகு அவளாலே பிடித்துக் கட்டப் பட்ட தோள்களையுடைய எமக்குத் தலைவனான அரங்க நாதனுக்கு ஆட்பட்டவர்களாக நாக்குத் தடிக்கும்படி 'நாராயணா' என்று கூப்பிட்டு, உடல் காப்பேறும்படி விழுந்து வணங்கித் தோத்திரம் செய்து மகிழ்கின்ற வைணவத் தொண்டர்களுடைய திருவடிகளை என் மன மானது துதித்து அவர்களுக்கே பல்லாண்டு பாடும்' என்கிறார் ஆழ்வார். a (5) நன்கு சிலைக்கும் ஏழு காளைகளின் கொம்பு களை முறித்தவனாய், போர் செய்ய வந்த காளிங்கன்' என்னும் பாம்பினை அடக்கியவனாய், கல்லினால் இயன்று ஒளிமிகுந்த பெரிதான மதில்களாலே குழப்பட்ட தென்னரங்கத்தில் எழுந்தருளியிருப்பவனான அரங்க, நாதனாகிற உடம்பில் வில்லோடு கூடிய ஒரு காளமேக