பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/530

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

532, மானது தங்கள் மனத்தில் நிலைத்து விளங்கப் பெற்ற மயிர்க்கூச்செறியும் மேனியுமுடைய வைணவர்களையே என் நெஞ்சானது நினைந்து மயிர்க் கூச்செறியப் பெற்றது' என்கிறார் ஆழ்வார். (6) முதலாயும் முடிவாயும் எல்லாமாயும் அற்புத மாயும் விளங்கும் வானவர்தம் தலைவனான அரங்கநாத னுடைய சிறந்த மலர் போன்ற திருவடிகளைச் சூடும் அன்பு இல்லாத பாவிகளும் உய்யும் பொருட்டு எல்லாத் தேயங்களிலும் சென்று சுற்றி, குற்றமற்ற நல்வழிகளைக் காட்டி நமக்குத் தலைவனான அரங்கநாதனுக்கே பக்தி பூண்டிருக்கின்ற தொண்டர்க்கு என் மனமானது எந்தப் பிறவியிலும் அன்பு பூண்டிருக்கும்' என்று புகல்கின்றார் குலசேகரர். (7) :மேகங்களின் திரளையொத்த திருமேனியையும், நன்கு சுடர்விடும் அழகினையும், முத்துகள் போல் வெளுத்த புன்சிரிப்பையுடைய சிவந்த திருப்பவளத்தையும் ஆரங் களையும் அணிந்த மார்பினையுடையவனுமான அரங்க நாதனாகிற ஒரு பரஞ்சோதியை அடிபணிந்து கண்ணுங் கண்ணிருமாய் நிற்கும் வைணவர்களின் இரண்டு திருவடி களுக்கு என் மனமானது ஒப்பற்ற அன்பைச் செலுத்தும்' என்று கூறுகின்றார் குலசேகரர். (8) திருப்பாற் கடலில் பள்ளிகொள்பவனும் நறுந்தேன் மிக்க துழாய் மாலையை யணிந்தவனும், பெரிய திருமார்பையுடையவனும், செந்தாமரை மலர் போலும் கண்ணை யுடையவனுமாகிய அரங்கநாதன்மேல் மையல் கொண்டு, இருந்த விடத்தில் இருக்க வொட்டாமையால் எழுந்து கூத்தாடி வாயாரப் பாடித் திவ்ய தேசங்கள் தோறும் சென்று வந்து அரங்கன்பால் பித்தேறித் திரிகின்ற வைணவர்களுடைய வாழ்வுக்கு என் மனம் மயங்கிக் கிடக்கின்றது' என்கிறார் ஆழ்வார்.