பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/531

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

533 (9) ஆனந்தக் கண்ணிர் இடைவிடாது சொரியவும், உடல் மயிர்க்கூச்செறியவும், நெஞ்சு தளர்ந்து களைத்துப் போய் நிலை தளர்ந்து கூத்தாடி, நின்றவிடத்து நில்லாமல் ஆட்டங்களாடிப் பாட்டுகள் பாடி வணங்கி, எனக்குத் தந்தையும் தலைவனுமான அரங்கநாதனுக்கு அடியவர் களாய், அவனுக்கே பித்தேறித் திரிகிறவர்கள் பைத்தியக் காரர்கள் அல்லர். பக்தியில்லாத மற்ற பேர்கள் எல்லாம் பைத்தியக்காரர்கள் தான்' என்று குலசேகரர் மொழி கின்றார். (10) சிறந்த தாமரை மலரிற் பிறந்த பிராட்டிக்குக் கொழுநனான அரங்கநாதனுடைய உண்மையான பக்தர் களுடைய எல்லையற்ற அடிமைத் திறத்தினில் எப்போதும் பொருந்திய திருவுள்ளத்தை யுடையவரும் கொல்லி நகர்க்கு அரசரும், மதுரைக்கு அரசரும், உறையூர் க்கு அரசரு மான குலசேகராழ்வாருடைய சொல்லால் அமைந்த இனிய தமிழ்ப் பாடல்களை ஒதவல்லவர்கள் தொண் டருக்குத் தொண்டர்கள் ஆவர் என்பது உறுதி. மூன்றாந் திருமொழி-மெய்யில் வாழ்க்கை திருமாலடியார் திறத்தில் எல்லையற்ற காதல் கொண்டிருந்த குலசேகரர், அரங்கத்தம்மான் அடியவ ால்லாத உலகினரோடு தமக்குச் சிறிதுந் தொடர்பின்மை யையும், திருமால்மாட்டுத் தமக்குள்ள பெரிய ஈடு பாட்டையுங் கூறுவன மெய்யில் வாழ்க்கை" எனப் பெரிய மூன்றாந் திருமொழிப் பாசுரங்களாகும். உள்ளுறை பொருள் (1) பொய்யான வாழ்க்கையை மெய் என்று கொண்டு வாழும் இவ் வுலகத்தாரோடு யான் சேர்வ தில்லை. ஐயனே, அரங்கா என்று நின் திருப்பெயர் களைச் சொல்லி அழையா நின்றேன். என்னிடத்தில்