பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/532

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

534 பரிவு காட்டும் திருமாலுக்கே யான் ஆராத காதல் கொண்டொழிந்தேன்' என்று குலசேகரர் கூறுகின்றார். - (2) நூல் போலும் இடையையுடைய பெண்டிரோடு பொருந்தியிருக்கிற இவ்வுலக மனிதரோடு யான் கூடுவது இல்லை. கூத்தாடி அரங்கா என்று கூப்பிட்டு, என்மேல் பற்று வைத்திருக்கும் எம்பெருமான்மேற் பெரிதும் காதல் கொண்டேன்' என்று ஆழ்வார் கழறுவர். (3) மன்மதனுடைய அழகிய கொடிய வில்லுக்கு ஆட்பட்டுத் திரிகிற இப்பூமியிலுள்ளாரோடு யான் கூடுவது இல்லை; முத்தாரத்தைத் திருமார்பிலே அணிந் துள்ளவனாய் அளவிட முடியாத குணங்குறிகளுடைய வனாய் எங்கும் வியாபித்திருப்பவனாய், அடியவர்களை நரகத்தில் சேராதபடி காத்தருள்பவனான அரங்கத் தம்மான்மாட்டுப் பித்தேறி நின்றேன்' ' என்று ஆழ்வார் கிளத்துவர். (4) உணவே, உடையே என்று கண்டவிடமெங்கும் ஒடித் திரிகிற இம் மண்ணுலகத்தாரோடு யான் கூடுவது இல்லை. பரமபதத்திலே வாழ்பவனும், கல் நெஞ்சுடைய பூதனையின் முலையை அமுது செய்த வாயையுடையனு மான அரங்கநாதன் விஷயத்தில் பைத்தியம் பிடித்த வனாயிரா நின்றேன்' ' என்கிறார் ஆழ்வார். (5) குற்றமற்ற நல்வழி தெளிவாக இருக்கவும், அவ்வழியில் போகாமல், நல்வழிக்கு எதிரானவற்றைச் செய்வதனையே விரதமாகக் கொண்டிருக்கும் அநீதியாளர் களோடு யான் கூடுவது இல்லை. உலகங்கட்கெல்லாம் முதல்வனாய் ஆயர்குடியில் கிருஷ்ணனாய் அவதரித்து அழகிய தாமரைப் பூவில் அவதரித்த பிராட்டியின் Д Г) GUNJГG)/ ПГ GYT OUT ГГ (GMT அரங்கநாதன் திறத்தில் பித்தேறி நிற்கின்றேன்' என்று ஆழ்வார் அருளிச் செய்கிறார். (6) என்னைப் போல இறைவன்மாட்டு அன்பு செலுத்தாதவரோடு யான் கூடமாட்டேன். மேலுலக