பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/533

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

536 ஏதேனும் ஓராற்றாற் தொடர்புடைய பிறப்பொன்றைத் தாம் விரும்பி வேண்டுதலையும் ஊனேறு செல்வம்' எனப் பெயரிய நான்காந் திருமொழிப் பாசுரங்கள் நலமுற நவில் கின்றன. உள்ளுறை பொருள் (1) நப்பின்னைப் பிராட்டியின் பொருட்டு ஏழு எருதுகளை வென்றவனான எம்பெருமானுக்கு அடித் தொண்டு செய்வதையே யான் வேண்டுவதல்லாமல், சதை வளர்ந்து தடிப்பதாகிற செல்வத்தையுடைய இம் மனிதவுடம்பெடுத்துப் பிறத்தலை யான் விரும்பமாட் டேன். அன்றியும் வளைந்திருக்கிற பாஞ்ச சன்னியம் என்னும் சங்கினை இடத்திருக்கையிலே யுடையவனான எம்பெருமானுடைய திருவேங்கடமலையில் திருக்கோனேரி என வழங்கப்படும் அழகிய திருக்குளத்தில் வாழ்கிற நாரை யாகவாவது பிறக்கக் கடவேன்' என்கிறார் குலசேகர ஆழ்வார். (2) அழியாத செல்வத்தையுடைய அரம்பையர்கள் என்னைச் சூழ்ந்து நிற்க மேலுலகத்தை அரசாளுகின்ற செல்வத்தையும், இம் மண்ணுலகத்தை ஆளுகின்ற அரசாட்சியையும் அரிய முயற்சியின்றிக் கிடைப்பதாயினும் யான் விரும்பமாட்டேன். தேன்மிக்க மலர்கள் நிறைந் துள்ள சோலைகளையுடைய திருவேங்கட மலையிலிருக்கிற சுனைகளிலே ஒரு மீனாகப் பிறக்கத்தக்க பேற்றினை யான் பெறக் கடவேனாக என்கிறார் ஆழ்வார். (3) திரித்துவிட்ட சடையையுடையவனான சிவனும், நான்முகனும், தேவேந்திரனும் நெருக்கி முயன்றும் உள்ளே புகுவதற்கு எளிதாயிராத பூலோக வைகுண்டமாகிய திருமலையிலுள்ள திருக்கோயிலின் நீண்ட திருவாயிலிலே, மின்னலை வளைத்தாற் போலச் சோதிமயமாய் விளங்கு கின்ற வட்ட வடிவமான சக்ராயுதத்தையுடைய திருவேங்