பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/534

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

537 கடமுடையான் வாய் நீர் உமிழ்கின்ற தங்க வட்டிலைக் கையிலேந்திக் கொண்டு அந்தரங்க அடிமைத் தொண்ட ருடனே யானும் உள்ளே புகும் பேற்றினைப் பெறக் கடவேன்' என்கிறார் ஆழ்வார். (4) ஒளியுமிழும் பவளக்கொடிகளைக் கரையிலே கொணர்ந்து கொழித்து அலைகள் உலாவுகிற குளிர்ந்த திருப்பாற் கடலிலே அறிதுயில் (யோக நித்திரை) செய் தருள்கின்ற மாயோனாகிய எம்பெருமானுடைய இரண்டு திருவடிகளைக் கண்டு வணங்கும்படியாக இசையையே பேச்சாகக் கொண்டிலங்கும் வண்டுகளின் கூட்டங்கள் பண்ணிசை முழக்கும் திருமலையிலே சண்பக மரமாய் நிற்கும் பேறுடையவனாகக் கடவேன்' ' என்கிறார் குலசேகரர். (5) தன்னைக் கண்டார்க்கு அச்சத்தால் நடுக்கத்தை விளைவிக்கின்ற மதங்கொண்ட யானையின் கழுத்தின் மீது வீற்றிருந்து நானாவித சுகங்களையும் பொருந்தி அனுபவிக்கும்படியான செல்வத்தையும், அதற்குக் காரண மான அரசாட்சியையும் யான் விரும்பமாட்டேன். எனது தலைவனும் எல்லா வுலகங்கட்குந் தலைவனுமான திருவேங்கடத்தானுடைய அழகிய திருமலையிலே புதராய் நிற்கும்படியானதோர் பேற்றினை உடையவனாகக் கடவேன்' ' என்கிறார் ஆழ்வார். (6) மின்னல் போலும் நுண்ணிய இடையை உடைய வர்களாகிய ஊர்வசியும் மேனகையும் போலும் அழகியவர் களான மகளிரின் பாட்டும் கூத்துமான அவற்றை யான் விரும்பவில்லை. வண்டுகளின் கூட்டம் தெனதென’ என்று ஆளத்தி வைத்து இசை பாடப்பெற்ற திருவேங்கட மலையிலே அப்படிப்பட்ட பொன்மயமான சிகரமாவதற் குரிய அருமையான தவத்தையுடையவனாகக் கடவேன்' என்கிறார் ஆழ்வார்.