பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/535

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

538 - (7) ஆகாயத்தைத் தனக்கு இடமாகக்கொண்டு விளங்குகின்ற பூரணசந்திரன் போன்ற ஒற்றை வெண் கொற்றக்கு டையின் கீழ் மன்னவர்கட்கெல்லாம் மன்னவ. னாகப் பெருமை தோன்ற வீற்றிருந்து அனைவராலும் கொண்டாடப் படுவதற்குக் காரணமான செல்வத்தை யான் ஒரு பொருளாக மதிக்க மாட்டேன். தேன் நிறைந்த மலர்கள் மிக்குள்ள சோலைகளையுடைய திருமலையின் மேல் ஒரு காட்டாறாகப் பெருகும்படியான கருத்தினை யான் உடையவனாக இருக்கின்றேன் என்று தம் கருத்தை வெளிப்படுத்துகின்றார் குலசேகரர். - (8) பிறைமதி சூடிய பெம்மானாகிய சிவனும், 'ாமனும், இந்திரனும் தத்தமது தகுதிக்குத் தக்கபடி செய் கின்ற பெரிய யாகங்களின் பயனாக அவர்களுடைய குறை யைத் தீர்த்து, அவர்களது வேண்டுகோள்களை நிறை வேற்றி வைப்பவனும்,வேதங்களிற் பரம்பொருளாகக் கூறப் படுபவனுமான எம்பெருமானுடைய பரிமளம் வீசும் மிகக் குளிர்ந்த சோலைகளையுடைய திருவேங்கட மலைமேல் போகிற வழியாக் கிடக்கின்ற நிலையை உடையவனாகக் கடவேன்' " என்று குலசேகரர் தம் விருப்பத்தை வெளியிடு கின்றார். - (9) செடிபோல் அடர்ந்துள்ள கொடிய வினை களைப் போக்கியருள்கிற பெருமானே! பெரியோனே! திருவேங்கடமுடையானே! உனது சந்நிதியின் உள் வாச லிலே பாகவதர்களும் மற்றைத் தேவர்களும் அரம்பை மாதரும் இடைவிடாது இயங்கப்பெற்ற படியாய்ப் o பொருந்தி உனது பவளம் போன்ற திருவவதாரத்தைக் காண்பேனாகக் கடவேன்' என்று ஆழ்வார் குறிப்பிடு கின்றார். - * (10) மேலுலகங்களை யெல்லாம் ஒரு கொற்றக் குேடையின் நிழலிலே அரசாண்டு, ஊர்வசியினுடைய அழகிய "பொன்னுடையணிந்த அல்குலை அடையப் பெறினும் யான் அதனை விரும்பமாட்டேன். சிவந்த பவளம் போன்ற