பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/536

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

^ 539 வாயை யுடையவனான எம்பெருமானுடைய திருவேங்கடம் என்கிற திருப்பெயரையுடைய அழகிய திருமலையின்மேல் ஏதேனுமொரு பொருளாகப் பிறக்கக் கடவேன்' என்று ஆழ்வார் கூறிக் கொள்கிறார். == (11) பகைவர்களைக் கொல்லுந் தொழிலைப் பயின்ற கூர்மையான வேலாயுதத்தையுடைய குலசேக ராழ்வார், நிலைபெற்ற குளிர்ச்சியுள்ள சாரல்களையுடைய வடவேங்கட மலையில் எழுந்தருளியிருக்கிற பெருமானது பொன்போற் சிறந்த சிவந்த திருவடிகளைக் கண்டு வணங்கு வதற்கு ஆசைப்பட்டுத் தொழுது அருளிச் செய்த-ஆராய்ந்த நூல்களிற் கூறிய இல்க்கணத்துக்கு இசைந்த தமிழ்ப் பாடலைக் கற்று வல்லவர் அப்பெருமான் திருவுள்ளத்துக்கு இனிய பக்தர்களாவர் என்று முடிக்கிறார் குலசேகரர். ஐந்தாந் திருமொழி - தருதுயரம் தடாயேல் திருமாலை அல்லாது தமக்கு வேறு ஒர் புகலிடமில்லை என்பதனைக் குலசேகராழ்வார் பல திருட்டாந்தங்கள் மூலம் இத்திருமொழியில் வெளியிடுகின்றார். ஒவ்வொரு பாடலிலும் அமைந்துள்ள உவமைகள் நயஞ் சிறந்தன வாயும், எடுத்துக்கூற வந்த பொருளை இனிது விளக்கு வனவாயும் உள்ளன. இத்திருமொழி மலைநாட்டில் திருமிற்றக்கோடு என்று இன்று வழங்கப்படும் திருவித்துவக் கோட்டில் எழுந்தருளியுள்ள திருமால் மீது பாடப் பெற்றன வாகும். இவ்வித்துவக்கோடு பட்டாம்பி என்ற ஊரின் பக்கத்தோடும் பாரதப் புழையின் தென் கரையில் உள்ளதும் திருமிற்றக் கோடு' எனத் தற்போது வழங்கப் படுவதுமான திருமால் தலம் என்பர். ஆனால் மகா வித்துவான் மு. இராகவையங்கார் அவர்கள் சேரரது பழைய தலைநகரமான கருவூரில் ஆமிராவதி நதிப் பக்கத்துள்ள திருமால் கோயிற் பகுதி இன்றும் வித்துவக் கோடு என்ற வழக்கு உடைத்தாயிருத்தலால், அதனையே