பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/537

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

540 கொங்கர் கோனான ஆழ்வார் குறிப்பிட்டவர் எனல் பொருந்தும் எனக் குறிப்பிடுவர்.48 உள்ளுறை பொருள் (1) நறுமணங் கெழுமிய மலர்கள் நிறைந்த சோலை களாலே சூழப்பட்ட திருவித்துவக்கோட்டில் எழுந்தருளி யிருக்கிற தலைவனே! நீயே எனக்குத் தந்த இத் துன்பத்தை நீயே களைந்திடாவிட்டாலும் உனது திருவடிகளேயன்றி எனக்கு வேறு புகலில்லை. பெற்ற தாயானவள் பெருங் கோபங் கொண்டதனால் தனது குழந்தையை வெறுத்துத் தள்ளினாலும் பின்பும் அத்தாயினுடைய கருணையையே கருதி அழுகின்ற இளங்குழந்தையை யொத்திரா நின்றேன்' என்கிறார் ஆழ்வார். (2) ஆகாயத்தை அளாவிய மதில்கள் எப்புறத்தும் சூழப் பெற்ற திருவித்துவக் கோட்டில் எழுந்தருளியிருக்கிற தலைவ! கணவனானவன் பார்ப்பவர்கள் அனைவரும் இகழத்தக்க செயல்களையே செய்தாலும், தன்னை மணந்துகொண்டவனான அக்கணவனையே யன்றி வேறொரு புருஷனை நினைப்பதுஞ் செய்யாத உயர்ந்த குலத்துப் பிறந்த கற்புடைய மகளைப் போல, என்னை அடிமை கொண்டவனான நீ, என் குறையைச் சிறிதளவு கூட நீக்கியாளாமற் போனாலும், ஒலிக்கின்ற வீரக் கழலையுடைய உனது திருவடிகளையே சரணமாகக் குறிக்கொள்வேன்' ' என்கிறார் குலசேகரர். (3) = மீன்களெல்லாம் தாம் வசிப்பதற்கு மிகவுந் தகுதியான இடமென்று ஆசையோடு பார்க்கிற நீர்வளம் மிக்க விசாலமான கழனிகள் சூழ்ந்த திருவித்துவக் கோட்டில் எழுந்தருளியுள்ள பெருமானே! அடியேன்பால் 48. சேரவேந்தர் செய்யுட்கோவை 11 பாகம் ப. 21. ஆழ்வார்கள் காலநிலை ப. (67.68).