பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/538

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

541 நீ அருள் நோக்கம் செய்யாதிருந்தாலும் உன்னைச் சரணாகப் பொருந்துதலை விட்டு வேறொருவரைச் சரண் எனப் பொருந்தமாட்டேன். குடிமக்களைக் காப்பதற். கென்று மாலையணிந்துள்ள மன்னன் அதற்கேற்றபடி தான் கவனித்துப் பாதுகாவாமல் எத்தகு கொடுமையான துன்பங்களைச் செய்தாலும் அவனுடைய செங்கோலையே எதிர்பார்த்து வாழ்கிற குடிமக்களை ஒத்திருக்கின்றேன்: ' என்கின்றார் ஆழ்வார். (4) வித்துவக்கோட்டு அம்மா! மருத்துவன் கத்தி யைக் கொண்டு அறுத்தாலும், ஊசியைக் காய்ச்சிக் குடு: போடுதலுமாகிய அறுவை சிகிச்சைகளைச் செய்தாலும் அம் மருத்துவனிடத்து நீங்காத அன்புடைய நோயாளி யைப் போல் உன் மாயையினால் நீ, நீங்காத துன்பத்தை எனக்கு விளைவித்தாலும், உனது அடியவனான நான் அவ் வடிமைத் திறம் முற்றும் வந்தெய்துவதற்காக உன்னுடைய கருணையையே நோக்கியிரா நின்றேன்" என்று உள்ளமுருக மொழிகிறார் ஆழ்வார். (5) பயங்கரமான கண்களையுடைய வலிய குவலயா பீடமென்னும் யானையைக் கொன்றவனே! வித்துவக் கோட்டு அம்மானே! உன் இணையடிகளையே நான் புகலிடமாக அடைவது அல்லாமல் வேறு யாரிடத்துச் சென்று யான் உய்வேன்? அலையெறிகிற கடலினிடையிலே நான்கு திசையினும் சென்று பார்த்து எங்கும் கரையைக் காணாமல் திரும்பிவந்து தான் முன்பு பொருந்திய மரக் கலத்தினுடைய பாய் மரத்தின் மீது சேர்கிற பெரியதொரு பறவையை யொத்திரா நின்றேன்' ' என்கிறார் ஆழ்வார். (6) வித்துவக்கோட்டில் எழுந்தருளியிருக்கும் எம் பெருமானே! செந்நிறமுடைய நெருப்பு தானாக அருகில் வந்து வெப்பத்தைச் செய்தாலும் செந்தாமரைகள் வானத்தில் தோன்றுகிற வெவ்விய கிரணங்களையுடைய சூரியனுக்கு மலருமேயல்லாது நெருப்புக்கு மலரமாட்டா: