பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/539

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

542: அனுபவித்தே தீர வேண்டியவையான கொடிய என் பாவங்களைத் தீர்த்தருளாதொழிந்தாலும் உனது எல்லை யற்ற உத்தம உயர் குணங்களுக்கேயல்லாமல் வேறொன்றுக் கும் யான் நெஞ்சுருக மாட்டேன்' என உறுதியுடன் மொழிகிறார் ஆழ்வார். (7) வித்துவக்கோட்டில் உறைகின்ற எம்பெருமானே ! மேகமானது எவ்வளவு காலம் மழை பொழியாமல் -ஒழியினும் பசுமை தாங்கிய பயிர்கள் கருநிறங்கொண்டு வான் வெளியில் தோன்றுகின்ற பெரிய மேகங்களையே எதிர்பார்த்திருக்கும். அப் பயிர்கள் போல, தவறாது அனுபவிக்கப்பட வேண்டிய என் துன்பங்களை நீ துடைக்காமல் என்னைக் கைவிட்டாலும் உன் அடியவனான நான் என் மனத்தை உன்னிடத்திலேயே மிகவும் செலுத் துவேன்' ' என்று ஆழ்வார் அகங்குழைந்து பாடுகின்றார். (8) மிகுதியாய் விளங்குகிற காளமேகம் போன்ற கரிய திருநிறமுடையவனே! வித்துவக்கோட்டு அம்மா! புண்ணிய வடிவானவனே! நீர்திரண்டு மிக்கோடும் ஆறு களெல்லாம் கண்ட விடமெங்கும் பரவியோடி இறுதியில் ஆழ்ந்த கடலிலே சென்று சேர்தல் அல்லது மற்றோரிடத் திலே புகுந்து நிற்கமாட்டா. அவ்வாறுகள் போல என் நெஞ்சினுள்ளே புகுந்து விளங்குகிற உன் மேன்மைகள் தவிரப் பிறிதோரிடத்தில் ஆழ்ந்திடேன்' என மொழி. கிறார் குலசேகரர். (9) மிக்க ஒளியையே கொண்டுள்ள சக்ராயுதத்தை யுடைய வித்துவக்கோட்டம்மா! உன்னையே விரும்பி, மிக்க செல்வத்தை விரும்பாதவனையே தானாகவே வந்து சேர விரும்புகிற செல்வமே போல, உன் மாயையினால் நீ என் மாட்டுப் பரிவு காட்டாயாயினும் உனது அடியவனான நான் உன்னையே அடைய விரும்பி நிற்பேன்' என்று ஆழ்வார் குறிப்பிடுகின்றார். (10) வித்துவக்கோட்டு அம்மா! நீ என்னை விரும்பா விடினும் வேறு யாரிடத்திலும் யான் போய்ச் சரணமடைய,