பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 கடம்பெறிந்த வாபாடி ஆடாமோ ஊசல். -சிலம்பு; 29, ஊசல் வரி 2 செங்குட்டுவனை எதிர்க்கும் பகைவர் நிலவரங்கில் இல்லாமையினால் நீரரங்கு சென்று குறும்பரோடு போருடற்றினான் என்று பரணர் பாடியுள்ளார். படைநிலா விளங்கும் கடல்மருள் தானை மட்டவிழ் தெரியல் மறப்போர்க் குட்டுவன் பொருமுரண் பெறாஅது விளங்குசினஞ் சிறந்து செருச்செய் முன்பொரு முந்நீர் முற்றி ஓங்குதிரைப் பெளவம் நீங்க வோட்டிய நீர்மாண் எ.கம். o -அகம்; 212 : 15.20. மேலும் பரணர், நீர்புக்குக் கடலொடு உழந்த பனித்துறைப் பரதவ -ஐந்தாம் பத்து; 8 : 3-4. என்று செங்குட்டுவனைக் கடலில் மீன்வேட்டம் ஆடும் பரதவனுக்கு ஒப்பிட்டுள்ளார். கடற்போரில் இவன் பெற்ற வெற்றியே இவனுக்குக் கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்', 'சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன்' என்னும் சிறப்புப் பெயர்களை நல்கியது. தன் தமையன் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் துளுநாட்டு நன்னனோடு, துளுநாட்டின் தெற்குப் பக்கத்திலிருந்து தாக்கியபோது, செங்குட்டுவன் துளு நாட்டின் மேற்குப் பக்கத்தில் கடற்கரையோரமாகச் சென்று தாக்கினான். நிலைச்செருவாய்ப் பல காலம் நடந்த இப்போர் இறுதியில் சேரர்க்கே வெற்றியைத் தந்தது. இப் போரில் செங்குட்டுவன் கொண்கான (துளு) நாட்டுக் கடற்கரைப் பகுதியிலிருந்த வியலூர், கொடுகூர் முதலிய ஊர்களை வென்று கைப்பற்றினான். வியலூர் துளு நாட்டின்கண் இருந்தது என்பதனை,