பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/540

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

543: மாட்டேன் என்று தம் அளவிட முடியாத அகக் காதலை வெளியிட்டு, அவ் எம்பெருமானது திருவடிகளிலேயே பற்று மிகக் கொண்டு வெற்றியைத் தரும் வேலாயுதத்தையும் சேனையையுமுடையவரான குலசேகரர் அருளிச் செய்த நல்ல தமிழ்ப் பாடல்கள் பத்தையும் ஒத வல்லவர்கள் கொடிய பாவங்கள் செய்திருந்தாலும் நரகத்திற் சேர LD ПГ I — I— ПГПТ 5 СТ. இவ்வாறு ஐந்தாந் திருமொழியினைத் தலைக்கட்டு கிறார் குலசேகரர். ஆறாத் திருமொழி-ஏர்மலர்ப் பூங்குழல் கிருஷ்ணாவதாரத்தில் ஆயர்குலத்து வந்து அவதரித்த கண்ணபிரானிடம் காதல் மீதுாரப் பெற்ற ஆயர்குல மகளிர் அப்பெருமானுடன் ஊடல் கொண்டு உரைத்தனவற்றை ஆறாந் திருமொழி அழகுற எடுத்துக் கூறுகின்றது. உள்ளுறை பொருள் (1) கண்ணபிரானே! அழகிய மலர்களை யணிந்த நறுமணம் நிறைந்த கூந்தலையுடைய இடையர் குலப் பெண்கள் எத்தனையோ பேர்களிருக்கப் பெற்ற இந்த ஆயர்பாடியில் உன்னுடைய மார்போடு அணைவதற்கு ஆசையின்மையை நன்றாக அறிந்து வைத்திருந்தும் உன்னுடைய பொய்யான வார்த்தைகளைக் கேட்டு அவற்றை மெய்யென நம்பி மயங்கி, மிக்க மழை போன்று பெய்கிற பணியால் ஏற்பட்ட குளிரிலே அகப்பட்டு, யார் என் செய்கையைப் பார்த்து விடுகிறார்களோவென்று கூச்சமடைந்து நடுங்கிக்கொண்டு யமுனையாற்றங்கரை யோரத்தே பெரியதொரு மணற் குன்றிலே உன் வரவை எதிர்பார்த்துக் கொண்டு பொழுது விடியுமளவும் அங்கேயே காத்து நின்றேன்' என்று ஆய்ச்சி ஒருத்தி கூறுவதாக இப் பாடல் அமைந்துள்ளது. -