பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/541

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

544. (2) - கண்ணபிரானே! என் வீட்டிற்குக் கீழண்டை வீட்டில், கயல் போன்று அழகிய கண்களை யுடையளான பெண் ஒருத்தி தனியே தயிர் கடைந்து நிற்பதைக் கண்டு, அவளை வசப்படுத்துதற்கு அதுவே தக்க சமயமென்று நிச்சயித்துக் கொண்டு, நானும் உன்னோடு கூட விரைவாக இத் தயிரைக் கடைகிறேன்" என்று வாயாற் சொல்லித் திருட்டுப் பார்வை பார்த்து, அவளருகே சென்று சேர்ந்து, வண்டுகள் மொய்க்கும் மலர்களை யணிந்த மயிர் (LDLoயானது அவிழ்ந்து அசையும்படியாகவும், ஒளி பொருந்திய முகமானது வியர்க்கும்படியாகவும், சிவந்த உத டானது துடிக்கும்படியாகவும் குளிர்ந்த தயிரை நீ கடைந்தபடியை நான் மெய்யாகவே அறிவேன் என்று வேறோர் ஆய்ச்சி பேசுகின்றாள். (3) மலர்களைச் சூடியுள்ள கறுத்த மயிர் முடியை யுடையவளான ஒரு பெண்ணைக் கடைக்கண்ணால் பார்த்துவிட்டு, அப்படியிருக்கச் செய்தே, வேறொரு பெண்ணிடத்தே மனத்தைப் பொருந்தச் செய்து, பின் அவளையும் விட்டு, வேறொரு பெண்ணிடத்தில் உனக்கு. நான் அடியேன்” என்று சொல்லி வைத்து, வேறொரு பெண்ணுக்குப் பொய்யாகவே ஒரு தனிமையிடத்தைக் குறிப்பிட்டு வைத்து, ஆக இத்தனை பெண்களையும் ஏமாற்றிவிட்டு, கடை குழன்று சுருண்ட கூந்தலையுடை யளான இளம்பெண்ணொருத்தியோடு கலவி செய்யா நின்றாய். பின் அந்தப் பெண்ணுக்கும் பொய்யனாயிரா நின்றாய். இரட்டை மருத மரங்களை முறித்துத் தள்ளினவனே! நீ வளர்வதோடு கூடவே உன்னுடைய. கள்ளங்கவடுகளும் வளர்ந்து வருகின்றனவே! அந்தோ . என்று ஆய்ச்சியர் குல மகளொருத்தி குறிப்பிடுகின்றாள். (4) தாயாகிய யசோதையின் முலைகளில் நல்ல. அமுதமான பால் இருக்கவும் அதனை விரும்பாமல் தவழ்ந்து கொண்டு தட்டுத் தடுமாறி நடந்து சென்று, பூதனை என்னும் அரக்கியின் முலைகளிலே வாயை வைத்து, அம்.