பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/543

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

546 (7) ஆயிரம் படங்களையுடைய ஆதிசேடன் என்னும் பாம்பின்மேல் பள்ளி கொள்ளும் நம்பியே! நாங்கள் உன் மாயைப் பேச்சு வலையில் முன்போல் அகப்பட்டு ஏமாற மாட்டோம். நீ விரும்பத்தக்கவர்களாய் மையணிந்து மான் போல் அழகிய கண் படைத்தவர்களான பெண்களும் அல்லோம். காலந் தாமதித்து எம் வீட்டிற்கு வருவதை நீ இனி விட்டுவிடு. அழகிய பொன்னாடையினையும், திருமுக மண்டலத்தினையும், சிவந்த கோவைக் கனி போன்ற உதடுகளையும், கூந்தல் முடியையும் பார்த்து அவற்றில் ஈடுபட்டு, உன் பொய் வார்த்தைகளில் ஒரு நாள் பட்ட பாடு போதுமே. இனியும் என்னிடத்தே வஞ்சக மான வார்த்தைகளைச் சொல்லாமல் உன் தேவிமார் களிடத்தே போய்ச் சேர்' என்று ஊடியுரைக்கிறாள் ஒர் ஆய்ச்சி. (8) என்னை இன்னவிடத்திற்கு வாவென்று குறி யிடம் கூறிவிட்டு, நிறைந்த மலர்களையுடைய முல்லைப் பந்தலின் நிழலிலே நீண்ட நேரமாகப் பதுங்கி நின்ற ஒருத்தியைக் கலவி செய்தற்குச் சென்று, அந்நிலையில் என்னைப் பார்த்துக் கலங்குவது போற் கலங்கி அப்பாலே நழுவினாய். பொன்னிற ஆடையைக் கையிலே தாங்கிக் கொண்டு பொய்யாக நீ எனக்கு அச்சமடைந்ததாக நான் பாவிக்கும்படி செய்து கொண்டு என் கைக்கு அகப் படாமல் நீ ஒடிப் போன போதிலும் இனி இங்கே என்னிடத் திற்கு ஒரு நாளாகிலும் வருவாயாகில் அப்போது யான் என் கோபத்தைத் தீர்த்துக் கொள்வேன்' என்று ஊடி நிற்கிறாள் ஒர் ஆய்ச்சி. (9) - மங்கலமான ந ல் ல வன மாலையானது மார்பிலே ஒளிவிட, மயிலிறகுகளை அணிந்து கொண்டும், பளபளவென்ற மெல்லிய ஆடையை இடையிலே உடுத்துக் கொண்டும், அழகிய பூங்கொத்துகளைக் காதிலே மிகவும் செறியச் சூடிக் கொண்டும், தேன் மணம் கமழ்கின்ற கூந்தலையுடைய பெண்களோடு குழைந்து, அதனால்