பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/544

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

547 ஏற்பட்ட மகிழ்ச்சி காரணமாகப் புல்லாங்குழலை நீ இனிமையாக ஊதிக்கொண்டு வந்தாய். ஒரு நாளேனும் |l எங்களுக்காக வந்து ஊதும்படி உனது குழலினின்றும் இசையானது வெளி வரமாட்டேன் என்கிறது' என்று கோபித்து நிற்கிறாள் ஆய்ச்சி ஒருத்தி. (10) இளமை மீதுாறிய இடைப் பெண்கள் தாமரைப் பூவில் பிறந்த பிராட்டிக்குக் கணவனான கண்ண பிரான்மீது ஆசைப்பட்டு, இரவின் நடுயாமத்திலே மாடலில் ஈடுபட்டுச் சொன்ன பாசுரங்களை உட்கொண்டு கொல்லி என்னும் நகருக்குத் தலைவரும் மதுரைக்கு மன்னருமான குலசேகராழ்வார் இ னி ய பண்ணிலே பொருந்த அருளிச் செய்த இனிய தமிழ் மாலையான இப் பத்துப் பாட்டையும் ஒத வல்லவர்களுக்குத் துன்பம் அனு காது. இவ்வாறு ஆறாந் திருமொழி முடிகிறது. ஏழாந் திருமொழி-ஆலை நீள் கரும்பு கண்ணபிரானது பிள்ளைத் திருவிளையாடல்களைக் கண்டு களிக்கும் பேறு, ஆயர்பாடி யசோதைப் பிராட்டி யார்க்கு வாய்த்தது போலத் தனக்கு வாய்க்காமையை நினைந்து, பெற்ற தாயான தேவகிப் பிராட்டியார் அப் பெருமானைக் கண்டபோது கழிவிரக்கத்தோடு கூடிய பேச்சாகப் புலம்பி மொழிந்த போக்கில் அமைந்துள்ளன இத் திருமொழிப் பாசுரங்கள். தாலாட்டுப் பாட்டு என்ற அமைப்பில் இப் பாடல்கள் அமைந்துள்ளன. பிள்ளைத் தமிழில் தாலப் பருவம் என்பதொன்றாகும். உள்ளுறை பொருள் (1) ஆலையிலிட்டு ஆடத் தகுந்த நீண்ட கரும்பு போன்ற கண்ணனே! உனக்குத் தாலாட்டு. தாமரை .ே பா ன் று விரிந்தகன்ற திருக்கண்களையுடையவனே! தாலேலோ. கடலின் நிறம் போன்ற நிறத்தையுடை