பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/545

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 548 யவனே, தாலேலோ. யானைக் குட்டி போன்றவனே தாலேலோ. நறுமணம் மிக்க நீண்ட குழலையுடைய என் மகனே! தாலே லோ. இவ்வாறு பல காலுஞ் சொல்லி என் வாய் திருப்தியடையும்படி உன்னைத் தாலாட்டுகிற செல்வமில்லாத தாய்மார்களில் கடையான தாயாய் இருக்கின்றேன்' ' என்று தேவகி புலம்பினள். (2) கூர்மையையுடைத்தாய் மையிடப் பெற்றதாய், செந்தாமரை ம ல ைர யொத்ததான கண்களாலே தொட்டிலின்மேற் கட்டியிலே தொங்கவிட்டிருக்கும் கிளி முதலியவற்றில் ஒரு பொருளை இனிதாகப் பொருந்தப் பார்த்துக் கொண்டும், கறுத்த புறந்தாளையுடையதும் செந்தாமரை மலரை யொத்துச் சிறுத்த சிவந்த அகவாயை யுடையதுமான திருவடிகளை முடக்கிக் கொண்டும், பருகின நீர் விளங்கப் பெற்ற மேகக்குட்டி போல அழகிய சிறுத்த திருவிரல்கள் எல்லாவற்றையும் உள்ளங் கையிலே அடங்கும்படி முடக்கிப் பிடித்துக் கொண்டும், ஒர் யானை கிடக்குமா போலே பள்ளி கொண்டருளும் அழகைக் கண்டு அனுபவிக்கப் பெறாத பாவியானேன்; ஐயோ! கண்ண பிரானே! ஒன்றுந் துய்க்கப் பெறாத பெரும் பாவி யானேன்' என்று தேவகி புலம்பினள். (3) அன்பு சுரக்கப் பெற்றவர்களான பரம்பரையாக வருகிற நல்ல உறவு முறையையுடைய பெண்கள் தங்கள் தங்கள் தொடைகளிலே முறை முறையே வைத்துக் கொண்டு, என் அப்பனே! எங்கள் குலத்துக்கு ஒப்பற்ற தொரு விளக்கானவனே! கருமேகத்தின் அழகைக் கவர்ந்து கொண்ட காளை போன்றவனே! என்று இவ்வாறு பல வாறாகத் துதித்து, உன் தந்தையார் யார்? காட்டு’ என்ற அளவிலே உன்னுடைய சிவந்த சிறந்த விரலி னாலும், கடைக்கண்ணாலும் இன்னார் என் தந்தையார் என்று காட்ட, அந்தப் பேற்றினை நந்தகோபர் பெற்றார். நல்வினையில்லாத என்லுடைய பதியான வசுதேவர் நந்த