பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/546

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

549 கோபர் பெற்ற பேற்றினைப் பெறவில்லையே' என்று தேவகி புலம்பினள். (4) - கிருட்டினனே! மகிழ்வூட்டும் கதிர்களையுடைய முழு மதியினை ஒத்த திருமுகமும், திண்ணிதான திருக்கை களும், திருமார்பும், வலிமை பொருந்திய திருத்தோள் களும், தளிரையும், மலரையும் உடைத்தாய்ச் கறுத்த திருக்குழற் கற்றையும், அட்டமி சந்திரன் போன்ற திரு நெற்றியும், விசாலமான தாமரை போன்ற திருக்கண் களும் ஆகிய இவை அழகு பெற்று விளங்கும்படியான இளமை பொழியும் இன்பத்தை இப்போது என்னுடைய கண்ணாலே நான் அனுபவியா நின்றாலும், இவள் என்னுடைய தாய் என்று நினைப்பதற்குத் தகுதியான பிள்ளைமைப் பருவத்திலுண்டான அளவற்ற மகிழ்ச்சி யினை அனுபவிக்கப் பெறாமல் இழந்த பாவியான என்னுடைய உயிரானது தடுத்து நிற்க வழியில்லையே’’ என்று தேவகி புலம்பினள். (5) உன்னுடைய திரு நெற்றியிலே பொருந்தி யிருக்கிற சுட்டியானது அசையும்படி, அழகிய வாயிலுண் டான முத்தத்தைக் கொடுப்பதென்ன, உன்னுடைய தந்தையாரைப் போன்ற உன் வடிவழகை நான் பார்த்து என் அகமானது குளிரும்படி சிவந்த சிறிய திருவாயிலே விரல்களை வைத்துக் கொண்டு நீ சீற்றத்தோடு சொல் லுகிற ம ழ ைல ச் சொற்களென்ன ஆகிய இவற்றிலே ஒன்றையும் பேறு அற்றவளான நான் அனுபவிக்கப் பெற வில்லை. தெய்வ நங்கை என்று சொல்லும்படியான யசோதைப் பிராட்டி அந்தப் பிள்ளைத் திருவிளை யாடல்கள் எல்லாவற்றையும் அனுபவிக்கப் பெற்றாளே” என்று தேவகி புலம்பினள். (6) குளிர்ந்த அழகிய தாமரை போன்ற திருக்கண் களை யுடையவனே! கண்ணபிரானே! நீ தவழ்ந்து கொண்டு எழுந்திருந்து, தட்டுத்தடுமாறி நடப்பதாகிற ஒரு நடை