பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/547

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

550 யினால் சிவந்த புழுதி மண்ணிலே விளையாடி, அக் கோலத் தோடு வந்து என்னுடைய மார்பிலே நீ அணையும்படியான பேற்றினை யான் பெற்றிலேன். அந்தோ! அழகு பெற்றுச் சிவந்து சிறிதான கைவிரல்கள் எல்லாவற்றாலும் வாரிக் கொண்டு அமுது செய்த உணவினுடைய மிச்சத்தை நான் உண்ணப் பெறவில்லை. இவற்றையெல்லாம் இழக்கும் படியான பாவத்தை யான் செய்தவளாவேன். ஐயோ! என் தாயானவள் என்னை எதற்காகப் பெற்றாளோ " என்று கழிவிரக்கத்தோடு தேவகி புலம்பினள். (7) எல்லாரோடும் கலக்கும் இனிய சுபாவம் உள்ளவனே! என் வயிற்றிற் பிறந்த அழகிய குமாரனே! கோவிந்தனே! என்னுடைய குடங்கையிலே பொருந்தி யிருந்து ஒழுகுகின்ற மிக்க அழகையுடைத்தாயும் மிகவும் இளையதான தளிர்போன்றதுமான திருக்கை ஒன்றாலே என்னுடைய ஒரு முலைக்காம்பை நெருடிக்கொண்டு, மற்றொரு முலையானது உன் மணி வாயில் இருக்க, நடு நடுவே என் முகத்தை நோக்கிப் புன்சிரிப்பை உதிர்த்துக் கொண்டு, அழகிய உன் இரண்டு கண்களாலும் பார்க்கிற பார்வையையும் ஐயோ! நான் இழந்தேனே' - என்று தேவகி புலம்பினள். (8) வெண்ணெயைக் குடத்திலுள்ள அளவும் கையை விட்டு அளைந்து எடுத்து உண்கிற இளந்தளிரையும் தாமரையையும் போன்ற சிறிய திருக்கைகளும் அழகிய தாம்பாலே அடிக்க, அதற்கு அஞ்சி நிற்கும் நிலையும், வெளுத்த தயிர் பூசிய சிவந்த வாயும், அழுவதும், பின் பயந்து பார்க்கிற அப் பார்வையும், அழகிய சிவந்த சிறிய வாய் துடிப்பதும், தொழுதல் செய்கிறதும் ஆகிய இவற்றை யெல்லாம் நேரிற் கண்ணாற்கண்டு அனுபவித்த யசோதை யானவள் பேரானந்தத்தின் எல்லையைக் காணப் பெற். றாள் என்று தேவகி மொழிந்தனள்.