பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/548

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

551 (9) கோவர்த்தன மலையைக் குடையாகத் தாங்கி நின்றதும், அழகாகக் குரவையாடியதும், குடக் கூத்தாடி யதும், கன்றாய் வந்த ஒர் அசுரனைக் கொண்டு, விளா மரமாய் நின்ற அசுரன் மீது எறிந்து விளாங்காய்களை உதிர்த்ததும், திருவடி கொண்டு காளிங்க நர்த்தனம் செய் ததும் ஆகிய இவை முதலாகவுள்ள வெற்றி பொருந்திய அழகிய பிள்ளை விளையாட்டுகள் எல்லாவற்றுள்ளும், ஒரு விளையாட்டினையும் என் நெஞ்சு குளிரும்படி நான் நீ அப்பிள்ளைமை விளையாட்டை நிகழ்த்திய இடத்தில் கண்ணாரக் கண்டு களிக்கப் பெற்றிலேன். இப்போது அவற்றை நான் காணத்தக்க வழி இருக்குமாகில் அதனை நீ யருளல் வேண்டும்' என்று கேட்கிறாள் தேவகி. (10) வஞ்சனை .ெ ப ா ரு ந் தி ய நெஞ்சையுடைய வளான பூதனையானவள் உடம்பு வற்ற, உடம்பிலுள்ள குருதி வெளியிற் கொழிக்கும்படியாகவும், நார் போன்ற நரம்புகள் கருகி உதிரும்படியாகவும், அவளுடைய நஞ்சு தோய்ந்த கள்ள முலையை நீ சுவைத்தும், என்மேல் கொண்ட அருளாலே உயிருடன் வளரப்பெற்றாய். அந்தோ! கம்சனுடைய ஆயுளைக் கட்டழித்த காளமேகம் போன்ற எந்தாய்! நான் முலையை வீணே சுமந்து கெட்ட வரிலும் கடைகெட்டவளானேன். உன்னையொழிய வேறு புகலிடம் ஏதும் இரா நின்றேன். என்றைக்காகிலும் உன்னைக் கண்ணால் காண்போமென்று உயிரைப்பிடித்துக் கொண்டு உயிர்க்கிறேன். உனக்குத் தகுதியான நல்ல தாயாரை நீ தேடிக்கொண்டாய்' என்று தேவகி புலம் பினள். (11) செல்வம் நிரம்பிய பெரிய நகரமாகிய வட மதுரைக்குத் தலைவனாயிருந்த கம்சனை வென்று வேற்றுலகு அனுப்பிவிட்டு, இங்கே (தேவகியிடம்) வந்து சேர்ந்த கண்ணபிரானுடைய மாயம் நிறைந்த எல்லை யில்லாத பிள்ளைமை விளையாட்டுகளை, நிகழ்ந்த காலை