பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/549

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

552 யில் காணப்பெறாத தெய்வத்தன்மை பொருந்திய தேவகி யானவள் புலம்பிக்கொண்டு சொன்ன பாசுரங்களைக் கொல்லி நகர்க்கு அரசராய், திருமாலின் திருவடிகளைத் தம் திருமுடிக்குப் புனைந்துள்ளவருமான குலசேகராழ்வார் அருளிச்செய்த நல்ல இசையையுடைய தமிழினாலாகிய சொல் மாலையை ஒதவல்லவர்கள் விரைவாக வைகுந்தத் தைச் சேரப் பெறுவர். இவ்வாறு ஏழாந் திருமொழி முடிவு பெறுகின்றது. எட்டாந் திருமொழி-மன்னுடிகழ் கண்ணபிரானது பிள்ளைமைத் திருவிளையாடல்களில் ஈடுபட்ட குலசேகரர், இராமாவதாரத்தில், நற்றாயான கோசலை பெற்ற பேற்றினையும், இராமனின் மற்ற வீரச் செயல்களையும் நினைந்து அவ் இராமபிரானது இளமைப் பருவத்தைத் தாலாட்டுமுகத்தாற் கொண்டாடுவன எட்டாந் திருமொழிப் பாசுரங்களாகும். இப்பாசுரங்கள் சோழநாட்டுத் திருப்பதிகள் நாற்பதில் ஒன்றான திருக்கண்ணபுரத்துக் கோயில் கொண்டிருக்கும் பெருமான் விஷயமாக அமைந்துள்ளன. உள்ளுறை பொருள் (1) நிலைத்த புகழுடைய கோசலையினுடைய அழகிய வயிற்றிலே பிள்ளையாக அவதரித்தவனே! தென்னிலங்கைக்கு இறைவனான இராவணனுடைய பத்துத் தலைகளையும் சிதறியோடும்படி செய்தவனே! செவ்விய பொன்னாலே செய்யப்பட்டதாய், அழிவில்லாத தாய், அழகான பெரிய திருமதிலாலே நாற்புறமும் சூழப் பட்ட திருக்கண்ணபுரத்தில் எழுந்தருளியிருக்கிற நீல மணி போன்ற எம்பெருமானே! எனக்கு இனிய அமுதாயிருப்ப வனே! இராமனே! உனக்குத் தாலாட்டு."