பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 அகவுகர்ப் புரந்த அன்பிற் கழல்தொடி நறவுமகி ழிருக்கை நன்னன் வேண்மான் வயலை வேலி வியலூர் -அகம்; 97 : 1.1.13. என்று மாமூலனார் கூறியுள்ளதனின்றும் உணரலாம். இவ்வெற்றியினைப் பதிற்றுப்பத்துப் பதிகம் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது: உறுபுலி யன்ன வயவர் வீழச் சிறுகுரல் நெய்தல் வியலூர் நூறி அக்கரை கண்ணிக் கொடுகூர் எறிந்து -பதிற்று; ஐந்தாம் பத்து: பதிகம். இளங்கோவடிகள், - - கறிவளர் சிலம்பில் துஞ்சும் யானையின் சிறுகுரல் நெய்தல் வியலூர் எறிந்தபின் -சிலம்பு; 28 : 114.115. என்று சிலப்பதிகாரத்தில் குறிப்பிட்டுள்ளார். செங்குட்டுவனுடைய பங்காளித் தமையனான தகடூர் எறிந்த பெருஞ்சேரலிரும்பொறை கொங்குநாட்டைக் கைப்பற்றிக் கொண்டபோது, சோழ பாண்டியர் கொங்கர்க்குத் துணை நின்று சேரனை எதிர்த்தனர். அப் போரில் செங்குட்டுவன் தன் அண்ணனுக்குத் துணைநின்று பகைவர் பலரையும் வென்றான் என்பதனைச் சிலப்பதி காரம் குறிப்பிடுகின்றது. நும்போல் வேந்தர் நும்மோ டிகலிக் கொங்கர் செங்களத்துக் கொடுவரிக் கயற்கொடி பகைப்புறத்துத் தந்தனர் ஆயினும் ஆங்கவை திசைமுக வேழத்தின் செவியகம் புக்கன. - -சிலம்பு; 25 : 152.155. கொங்கணர் கலிங்கர் கொடுங்கரு நாடர் பங்களர் கங்கர் பல்வேற் கட்டியர் வடவா ரியரொடு வண்டமிழ் மயக்கத்துன் கடமலை வேட்டம் கட்புலம் பிரியாது -சிலம்பு; 25 : 156-159.