பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/550

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

553 (2) தாமரைப் பூவின்மேல் பிரமனைத் தோற்று வித்து அவன்முகமாக உலகங்கள் எல்லாவற்றையும் உண்டாக்கியவனே! மிகவும் பலத்தையுடையவளான தாடகையினுடைய மார் பைத் துளைக்கும்படியாக வில்லை வளைத்து அம்புகளை எய்தவனே! கண்டு உன்னைத் தொழுதவர் தங்கள் மனத்தைத் தாங்களே இசைந்து கொடுப்பதற்குகந்த கணபுரத்து என் கருமணியே! எட்டுத் திக்கிலுள்ளவர்களையும் அடிமை கொண்டருளுபவனே! இராகவனே! தாலேலோ!' (3) :நறுமணம் வீசும் கறுத்த கூந்தலையுடையளான கோசலையினுடைய சிறந்த பிள்ளையே! பெருமை சான்ற ஜனகனின் மாப்பிள்ளையே! சக்கரவர்த்தித் திருமகனே! கங்கை நதியினும் சிறப்பு மிக்க தீர்த்தங்களையுடைய திருக் கண்ணபுரத்திலே எழுந்தருளியிருக்கிற என் கருமணியே! எங்கள் அரச குலத்திற்கெல்லாம் இனிய அமுதம் போன்ற வனே! இராகவனே தாலேலோ! -- (4) திருநாபிக் கமலத்திலே பிரமனை உண்டாக்கின வனே! தசரதனுடைய மூத்த குமாரனே! சீதை மண வாளனே! வண்டுகளின் கூட்டங்கள் காமரம் என்னும் இசையைப் பாடப்பெற்ற திருக்கண்ணபுரத்திலே எழுந் தருளியிருக்கிற என் கருமணியே! அம்புகள் பொருந்திய சார்ங்கம் என்னும் வில்லை ஆளவல்லவனே! இராகவனே! தாலேலோ. (5) நிலவுலகம் முழுதையும் ஆட்சி செய்கிற பெரிய அரச செல்வத்தைப் பரதனுக்கே கொடுத்தருளிவிட்டு, நிறைந்த காதல் நெஞ்சங்கொண்ட இளைய பெருமாளுடன் கூடப்புகுவதற்கு அரிய காட்டை நோக்கி எழுந்தருளி யவனே! வீர இலக்குமிக்கு இருப்பிடமாய் மலைபோன்ற திருமார்பையுடையவனே! திருக்கண்ணபுரத்து அரசே! மாலையோடு கூடின சிறந்த திருமுடியையுடையவனே! என் தாசரதி! தாலேலோ.: