பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/551

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

554 (6) எல்லா உறவினரும் பின்னே தொடர்ந்துவர, பழமையான தண்டகாரண்ணியத்திற்கு எ ழு ந் த ரு வரி யவனே! உனக்கே அற்றுத் தீர்ந்த பரமபக்தர்களுக்கு அருமருந்து போன்றவனே! அயோத்தி மாநகர்க்கு அரசனே! ஞானிகள் வாழ்வதற்கு இடமான திருக்கண்ணபுரத்திலே எழுந்தருளியிருக்கிற நீலமணி போலும் அழகிய எம் பெருமானே! சிறிய தாயாகிய கைகேயியினுடைய சொல்லை ஏற்றுக் கொண்ட இராமனே! தாலேலோ.' (7) :முன்பு பெரிய வெள்ளம் (பிரளயம்) வந்த போது ஒர் ஆலந்தளிரிலே குழந்தை வடிவாய்க் கொண்டு உலகங்களை யெல்லாம் திருவயிற்றில் வைத்து நோக் கினவனே! வாலியைக் கொன்று அவனது தம்பியான சுக்ரீவனுக்கு அரசைக் கொடுத்தவனே! கால்வாய்களிலே யுள்ள இரத்தினங்களை கரையிலே கொண்டு கொழிக்கப் பெற்ற திருக்கண்ணபுரத்தில் எழுந்தருளியிருக்கிற என் கருமணியே! திருவாலி திருநகரிக்குத் தலைவனே! அயோத்தி நகர்க்கு அரசனே! தாலேலோ. ' (8) மலைகளைக் கொண்டு சேது அணைகட்டி, அரணுடைத் தான இலங்கை மாநகரைப் பாழ்படுத் தினவனே! அலையெறியும் திருப்பாற் கடலைக் கடைந்து தேவர்களுக்கு அமிர்தத்தைக் கொடுத்தருளியவனே! சகல கலைகளையும் அறிந்தவர்கள் வாழ்கிற திருக்கண்ண புரத்தில் எழுந்தருளியிருக்கிற என் கரும ணியே! சார்ங்கம் என்னும் வில்லைச் செலுத்த வல்லவனே! வீரனே! சீராமா! தாலேலோ. (9) கட்டு அவிழும்படியான நறுநாற்றமுடைய மயிர் முடியை யுடையவனான தசரத சக்கரவர்த்தியினுடைய சிறந்த திருக்குமாரனே! ஒப்பற்ற வில்லானது வளைய, அந்த வில்லாலே மதில் பொருந்திய இலங்காபுரியை அழித்தவனே! களையாகப் பறிக்கப்பட்ட செங்கழுநீர் பூக்கள் சுற்றிலும் மலரப்பெற்ற திருக்கண்ணபுரத்தில்