பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/552

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

555 எழுந்தருளியிருக்கின்ற என் கருமாமணியே! இளைய வர்கள் திறத்தில் கருணை பொருந்தியவனே! இராகவனே! தாலேலோ. (10) தேவர்களையும் அசுரர்களையும் திசைகளை யும் தோற்றுவித்தவனே! யாவரும் வந்து திருவடிகளில் விழுந்து வணங்கும்படியான திருவரங்கத்திலே பள்ளி' கொண்டிருப்பவனே! காவிரி என்னும் சிறந்த ஆறானது பெருகியோடும் திருக்கண்ணபுரத்தில் எழுந்தருளியிருக்கிற என் கருமணியே! அம்புகள் தொடுக்கப்பெற்று அழகிதாயும் அதே நேரத்தில் பகைவர்களுக்குக் கொடிதாயுமிருக்கும் வில்லை ஆளவல்லவனே! இராகவனே! தாலேலோ.' (11) இராமபிரான் விஷயமாகக் கோசலையார் தாலாட்டுகையிற் சொன்ன பாசுரங்களை உட்கொண்டு: கொலைத் தொழில் புரிகின்ற வேலாயுதத்தைச் செலுத்த வல்லவரும் குடையையுடையவருமான குலசேகராழ்வார் அழிவில்லாத சிறந்த அழகிய மதில்கள் நாற்புறமும் குழப் பெற்ற திருக்கண்ணபுரத்திலே அருளிச்செய்த தமிழ்ப் பாமாலையாகிய இப்பத்துப் பாசுரங்களையும் பாட வல்லவர்கள் பாங்கமைந்த பக்திமான்களாகப் பெறுவர்.' இவ்வாறு முடிகிறது எட்டாந் திருமொழி. ஒன்பதாந் திருமொழி-வன்றாளினிணை இராமாவதாரத்தில் ஈடுபட்ட ஆழ்வார், கண்ண பிரானது குழவித் திருவிளையாடல்களைக் காணும் பேறு. தேவகி பிராட்டிக்கு வாய்க்காதது போல, இராமபிரானது இளமைச் செயல்களைக் காணும் பேறு தசரதர்க்கு. வாய்க்காமையை நினைந்து, தன் திருமகன் காடுநோக்கிச் சென்ற பிரிவினை ஆற்றமாட்டாமல் அச்சக்கரவர்த்தி புலம்பியவாற்றைக் கொண்டு மொழிவன ஒன்பதாம். திருமொழிப் பாசுரங்கள்.