பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/553

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

556 உள்ளுறை பொருள் (1) ஒ! எமது இராமனே! அழகிய அயோத்தி மாநகரத்து மக்கள் அனைவரும் சரணமடைந்தவர்களை எப்பொழுதும் விடாமற் பாதுகாக்கும் வலிமையுடைய உனது இரண்டு திருவடிகளிலும் விழுந்து எழுந்து கைகூப்பி நின்று துதிக்க, அரசனாக முடிபுனைய ஆயத்தமாய் நின்றவனும், அரியணைமேல் அமர்வதற்கு ஆயத்தமாய் இருந்தவனுமான உன்னைப் பெரிய காட்டிற் செல்லுதற்கு *இந்நகரை விட்டும் நீங்கிப் போ என்று கைகேயி கூறினாள். நல்ல மகனே! நான் உன்னைப் பெற்று வளர்த்த தாயான கைகேயியின் வார்த்தையைக் கேட்டு உன்னை நிலவுலகத்தை நன்றாக ஆளும்படி செய்தேன். ' (2) எம் இராமாவோ! கொடிய வாயையுடை யவனான என்னுடைய கடுஞ் சொற்களைக் கேட்டு, பெரிய பூவுலகத்து அரசாட்சியை விரும்பாமலே விட்டுவிட்டு, விரைந்து வெற்றியை விளைப்பதான மைம்மலை போன்ற வடிவத்தையுடைய யானையும் தேரும் குதிரையுமாகிய ஊர்திகளையொழிய விட்டு, காட்டையே சேர்ந்து, நெய் பூசிய நுனியையுடைய வேலாயுதம் போன்ற நீண்ட கண் களையும் தகுதியான அணிகலன்களையும் உடையளான பிராட்டியும் இளைய பெருமாளும் உடன் தொடர்ந்துவர எங்ங்னம் நடந்து சென்றாயோ? எமது ஐயனே! நான் என் செய்வேன்?" (3) கொலைத் தொழில் பொருந்தின வேலாயுதம் போன்ற செவ்வரி பரந்த நீண்ட கண்களையுடைய கோசலையினது குலத்தில் தோன்றிய குமாரனே! வளைந்த வில்லைத் தடுத்த வவிமை பொருந்திய மலைகள் போன்ற தோள்களை யுடையவனே! மனத்தைக் கசியச் செய்வதில் வல்லவனே! காகுத்த மரபில் தோன்றியவனே! கருநிற முடைய ஐயனே! மென்மையான பஞ்சணை மெத்தையின் மேல் முன்பெல்லாம் படுத்துறங்கிப் பழகினவனான நீ,