பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/554

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

557 இனிமேற் புதிதாக இன்றைக்குச் சென்று, பெரிய காட்டி லுள்ள மரத்தின் நிழலிலே கருங்கற் பாறைகளையே படுக்கையாகக் கொண்டு அதன்மேற் படுத்துத் துயிலப் பழகுகின்றாயோ?" (4) சற்று இங்கே வா; இனிச் செல்வாயாக. மறு படியும் இங்கு வா. போகும்பொழுது பின்னையும் ஒரு முறை வந்து என்னைப் பார்த்துவிட்டுப் போ. பூக்களை எப்பொழுதும் தரிக்கிற மயிர்முடியை யுடையவளும், மூங்கிலை யொத்த அழகிய தோள்களையுடையவளுமான பிராட்டியை மணம் புரிதற் பொருட்டுச் சிவனுடைய வில்லை முறித்தவனே! பெரும்பாவியான எனது மனத்தை உருகச் செய்கிற மைந்தனே! இப்பொழுது நீ யானைகள் வசிக்கும் பெரிய காட்டுக்குப் போக, என் மனமானது இரண்டு பிளப்பாகப் பிளந்து போகாமலே வலியதாய் நிற்குந் தன்மைதான் என்னே! (5) =பகைவர்கள் கையிலேந்தும் கூர்மையான வேலாயுதத்தின் நுனி போன்ற பருக்கைக் கற்கள் காலில் தைத்து வருத்தவும், அதனால் மென்மையான உன் கால் களினின்றும் குருதி பெருகவும், மேலே வெயிலுறைக்கவும், வேண்டிய போது உணவு கிடையாமையிலே கொடிய பசியாகிய நோய் மிகவும் பெரும்பாவியானது எனது மைந்தனே! இப்பொழுது எவரும் விரும்பாத காட்டை, நான் போகச் சொன்னேன் என்பதனாலே விரும்பி அக்காட்டிற்குச் செல்கிறாய். கே.கய அரசன் பெற்ற மகளான கொடிய பாவியாகிய கைகேயினுடைய வார்த்தை யைக் கேட்ட கொடியோனாகிய நான் ஐயோ, என்ன செய்வேன்! " (6) ஐயா! என்று மகிழ்ச்சியோடு என்னை அழைக் கின்ற அன்பு விளங்குஞ் சொல்லை நான் கேட்கப் பெறாமலும், அணிகலன்கள் நிறைந்த என் மகனுடைய மார்பு என் மார்பிலே அழுந்தும்படி நான் அவனை இறுகப்