பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/555

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

558 புல்லி அணைத்துக் கொள்ளாமலும், அந்த அணைப்பு இன்பத்தில் மூழ்காமலும், உச்சியை மோந்திடாமலும், யானையினது நடைபோன்ற கம்பீரமும் மென்மையும் கலந்த நடையின் அழகையும், தாமரை மலர் போன்ற அவனது முகப்பொலிவையும் காணாமலும், எமது ஐயனான என் மகனைக் காட்டிற்குப் போக்கி இழந்து விட்ட இழிவான செயலைச் செய்தவனான நான் இன்னமும் அழிந்திடாமல் உயிர் வாழ்ந்திருக்கின்றேனே! " (7) துாய்மையான மறைகளை யோதும் அந்தணர் களே! சுமந்திரரே! வசிட்ட முனிவரே! உங்களை ஒர் செய்தி கேட்பன். மலர் அறாது மணம் கமழும் திருக் குழலை விகாரமான சடையாகத் திரித்து, நல்ல பொன் னாடை சார்த்த வேண்டிய இடையில் விசுவாமித்திரம் என்னும் ஒரு வகைப்புல்லைக் கயிறாக முறுக்கிச் சார்த்தி, திருவாபரணங்கள் அணியாமல், இயற்கையழகுக்கு மேல் திருவாபரணங்களால் உ ண் டா கு ம் செயற்கையழகு இன்றியே காத்தளிக்கும் தோள்களையுடையவனான எனது குமாரனானவன் நான் இப்போது போகவேண்டிய காட்டுக்குத் தான் போவது தகுதிதானோ? நீங்களே ஆராய்ந்து சொல்லுங்கள்.' (8) கைகேயியே கல்விச் செல்வம் கைகூடப் பெற்ற வர்களான நல்ல ஆசிரியர்களின் கீழ் அமைந்து அழகிய வேதங்களை ஒதியிருக்கிற மூத்த மகனான இராமனையும்: அவனது தம்பியான இலக்குவனையும், பேச்சினிமையிற் கிளி போன்றவளும், மின்னலும் இணையாக மாட்டாத நுண் ணிய இடையையும் மென்மையான தன்மையுமுடைய வளுமான என் மருமகளாகிய சீதையையும் காட்டுக்குப் போகச் செய்து, உனது அன்புக்கு இடமான உன் மகனான பரதன்மேற் பழியுண்டாம்படி செய்து, என்னையும் நீண்ட தூரத்திலுள்ள மேலுலகத்திற்குச் செலுத்துவதனால் நீ என்ன பயன்பெற்றாய்? இவ்வளவும் செய்து விட்டு ந் இப்பெரிய நிலவுலகத்தில் சுகமாக வாழ்கின்றாயே..'