பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/556

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

559 (9) முன்பு ஒரு நாளிலே பரசுராமனிடத்திலிருந்து அவன் கை வில்லை வாங்கி, அவனியற்றிய தவப்பயனை யெல்லாம் உன் அம்புக்கிலக்காக்கி அழித்து விட்டவனே! உன் மேன்மையையும், உன்னைப் பெருநோன்பு நோற்று அருமை மகனாகப் பெற்ற தன்மையையும், உனது பெற்ற தாயான கோசலை உன்னைப் பிரிந்தால் தரிக்க மாட்டாது உன் பின்தொடர்ந்த வருத்தத்தையும் நீ ஒரு பொருளாகக் கொள்ளாமல், என்னையும் எனது உண்மைவாக்கினை யுமே உறுதிப் பொருள்களாகக் கருதிக் காடு புகுந்த என் ஐயனே! பெரிய தோள்களையுடைய அரசனே! இனிப் பிறக்கப் போகும் பிறவிகளிலும் நீயே எனக்குப் பிள்ளை யாகப் பிறக்கும்படியான பேற்றினைப் பெறக்கடவேன்.' (10) மனுகுலத்திற் பிறந்த அரசர்களிற் சிறந்த வனே! தேன் நிறைந்த மலர்களைச் சூடிய கூந்தலை யுடைய கோசலையும் சுமித்திரையும் ம்னம் வருந்த, வடிவம் போன்றே மனமும் கோணலாகப் பெற்ற கனியினது சொற்களைக் கேட்ட கைகேயியின் சொல்லை ஏற்றுக் கொண்டு, காட்டையே பெரிதும் விரும்பி இப்பொழுது நீ கைவிட்ட முடிசூட்டுவிழாவின் பெ ருட்டு அணி செய்யப் பெற்ற இந்நகரத்தை நானும் விட்டு நீங்கி மேலுலகத்தையே மிகவும் விரும்பி அவ்விடத்திற்கே செல்கின்றேன்.' (11) அழகு நிறைந்த கருநிறமுடைய திருமால் இராமனாகத் திருவவதாரம் செய்து, காட்டிற்குச் சென்ற தான அச்செயலைப் பொறுக்க மாட்டாமல், வெற்றி மாலை பொருந்திய பெரிய மலைபோன்ற தோள்களை யுடைய தசரத சக்கரவர்த்தி புலம்பிய அப்புலம்பல்களைக் கூர்மை மிக்க வேற்படைத் தொழிலில் மேம்பட்டவரும் உறையூரிலுள்ளார்க்குத் தலைவரும் கொற்றக்குடையை யுடையவருமான குலசேகராழ்வார் அருளிச் செய்த சிறப்பு மிக்க தமிழ்மாலையாகிய இப் பத்துத் திருப்பாடல்