பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/557

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

560 களையும் கற்க வல்லவர்கள் கொடிய வழியொன்றிலும் சென்று சேரமாட்டார்கள்.' இவ்வாறு முடிகிறது ஒன்பதாந் திருமொழி. பத்தாந் திரு மொழி - அங்கணெடுமதிள் கற்பார் இராமபிரானையல் லால்மற்றும் கற்பரோ" என்றபடி இராமபிரானிடம் பெரிதும் ஈடுபாடு கொண்ட குலசேகராழ்வார், அப்பெருமான் அவதாரம் செய்தது தொடங்கித் தன் பரந்தாமம் எழுந்தருளியவளவும்: நிகழ்ந்த அருஞ் செயல்களை நினைந்து, வால்மீகி முனிவர் இராம சரித்திரத்தைப் பேசியனுபவித்ததுபோலத் தாமும் பேசி யனுபவிக்கிறார். மேலும் இ த் தி ரு .ெ ம ா ழி ைய த் தில்லைத் திருச்சித்திரகூடத்துத் திருமால் பரமாக்கி மொழிந்துள்ளார். - உள்ளுறை பொருள் (1) அழகிய இடத்தையுடையதும் உயர்ந்த மதில் களினால் நாற்புறமும் சூழப்பட்டதும் அயோத்தியா' என்று சிறப்புற வழங்கப்படுவதான அழகிய நகரத்திலே அனைத்துலகங்களையும் விளங்கச் செய்கிற தன் ஒளியின் மேன்மையாலே, தான் பிறந்த சூரிய மரபுக்கு விளக்கமேற். படும் செய்து, ஒப்பற்றதொரு விளக்குபோல வந்தவதரித்து: தேவர்கள் துன்பந் தீர்த்து வாழச் செய்த பெரு வீரனும் சிவந்த திருக்கண்களையுடைய பெரிய காளமேகம் போன்ற வடிவினையுடையவனும், இராமன் என்னும் திருப்பெயர் கொண்டவனும், தில்ல்ை நகரத்திலுள்ள திருச்சித்திர கூடத்தில் எழுந்தருளியிருக்கிற எங்கள் ஒப்பற்ற முதல்வனும் எமக்குத் தலைவனுமான பரமனைக் கண்கள் குளிரும்படி கண்டு வணங்கும் நாள் எந்நாளோ!' 49. திருவாய்மொழி; 7:5:1.