பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/558

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

561 (2) : செருக்குடன் வந்து எதிர்ப்பட்ட தாடகை யினுடைய மார்பைப் பிளந்து, குருதி வெளிவந்து கொட்டும்படி வலிய ஒப்பற்றதோர் அம்பைச் செலுத்தி, மறைமொழிகளை நிரம்பக் கொண்ட விசுவாமித்திர முனிவரின் வேள்வியினைப் பாதுகாத்து, மேலும் அந்த வேள்விக்கு இடையூறு செய்த சுபாகு முதலான வலிய அரக்கர்களுடைய உயிரைக் கொள்ளை கொண்ட வலிமை யுடையவன் யாரெனில் சிவந்த தளிர்களின் நடுவே மலர்ந்த பூக்களையுடையதும், காண்பவர் மகிழும்படியான அழகு பொருந்தினதும் செழுமையையுடையதுமான குளிர்ந்த சோல்ைகளையுடைய தில்லைநகர் திருச்சித்திர கூடந் தன்னுள், அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் திரண்டு வந்து துதிக்க, அழகிய சிங்காதனத்தில் வீற்றிருந்த அம்மான் அவன்தானே என்று அறிவிர்களாக. . (3) சிவந்த ரேகைகள் படர்ந்த அழகிய கருமையான நீண்ட கண்களையுடைய சீதையை மணம் புரிதற்பொருட்டு, சினத்தையுடைய இடபத்தினை ஊர்தியாகக் கொண்ட சிவபிரானுடைய வில்லை முறித்து, பின் மணமுடித்து, மிதிலையினின்று திரும்பும் வழியில் கோடாலியாகிய ஆயுதத்தை ஏந்தியவனான பரசுராமனுடைய அஞ்சத்தக்க கட்டமைந்த சிறந்த வில்லைக் கையிற்கொண்டு வளைத்து அவனை வென்று, தான் அவதரித்த மரபான - வேற் படையையுடைய அரச மரபினரின் (rத்திரியர்களின்) பகையைத் தீர்த்த பெருவீரனும், பகைவர்கள் கண்ட மாத்திரத்திலேயே அஞ்சும்படியான உயர்ந்த மதிலையும் ஓங்கிய அட்டாலையென்னும் மதிற்பக்கத்திடத்தையு முடைய தில்லை நகர்த் திருச்சித்திர கூடந்தன்னுள் எழுந் தருளியிருக்கிறவனும், அடக்கியாளுதற்கு அரியதும் பகை வர்க்குப் பயங்கரமுமான வில்லை ஏந்திய பெரிய கையை யுடைய இராமபிரானை வணங்குகிற அடியார்களுடை இரண்டு திருவடிகளையே வணங்கினேன். ' o, சே. செ. இ.36