பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/559

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

562 (4) கொத்துக் கொத்தாக மலர்ந்த பூக்களைச் சூடிய கடை குழன்ற கூந்தலையுடைய கைகேயியினது சொல்லின்படி, தொன்றுதொட்டு ம ர ப ா க வரும் அரசாட்சியைக் கைவிட்டு, கங்கையின் துறையைச் சிறந்த பக்தனான குகப்பெருமாள் புணை செலுத்தியுதவக் கடந்து காட்டிற்குச் சென்று சேர்ந்து அங்கு வந்த பரதனுக்குத் தனது மரவடியையும் அரசினையும் வழங்கி, சித்திரகூட பர்வதத்தில் எழுந்தருளியிருந்த இராமபிரானை இப் பொழுது பிற்காலத்தில் தில்லைத் திருச்சித்திர கூடம் தன்னுள் கண் குளிரும்படி கண்டு வணங்கப் பெற்ற இந்நில வுலகத்திலுள்ளவர்க்கு இமையவர்கள் சிறிதும் சமமாக மாட்டார்கள்! (5) எதிரிகளுடைய வலிமையைத் தோற்பிக்கின்ற மலை போன்ற பெரிய தோள்களையுடைய விராதன் என்னும் அரக்கனைக் கொன்று, சிறந்த தமிழ் மொழிக்கு உரியவரான அகத்திய முனிவர் கொடுத்த கட்டமைந்த வில்லைப் பெற்று, மானின் பார்வையை வெல்லும்படியான பார்வையழகையுடையவளாய் வந்த சூ ர் ப் ப ன ைக யென்னும் அரக்கியின் மூக்கை யறுத்து, கரன் துரடணன் என்னும் அரக்கர்களின் உயிரைப் போக்கி, மாரீசனாகிய மாயமான் அழியும்படி தனது வில்லை வளைத்து அம்பு களை எய்தவனான இராமபிரானைத் தில்லைத் திருச் சித்திர கூடந் தன்னுள் தலைவணங்கிக் கைகூப்பித் துதிக்க வல்ல அடியார்கள் இப் பூமியில் நடமாடுதலால், இந்தப் பூமியானது பெரிய பேற்றினையுடைத்து.' (6) தான் விரும்பும் செல்வமாகப் பொருந்திய பிராட்டி பிரியப்பெற்று அதனால் வருத்தமுற்று, சடாயு என்னும் கழுகரசைப் பரமபதத்திற் செலுத்தி வாலிக்கு அஞ்சிக் காட்டில் கரந்துறைந்த வானர அரசனான கக்கிரீவனுடன் நட்புச் செய்து, அவனது விருப்பத்தின்படி அவன் தமையனான வாலியை வதைத்து, இலங்கை மாநகரை, அதற்குத் தலைவனான அரக்கர் தம்