பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 = r - பங்களர், கட்டியர், கங்கர் என்போர் அக்காலத்தே தமிழகத்தைச் சுற்றியிருந்த பகுதிகளில் இருந்தவர் ஆவர். வேங்கட மலைக்கு மேற்கே தமிழ் நாட்டின் எல்லைப்புற நாடாக இருந்தது பங்கள நாடாகும். இந்த வெற்றி சேரன் செங்குட்டுவனின் வீரத்தையும் வெற்றி மேம் பாட்டையும் வளர்த்து நின்றது. - சேரன் செங்குட்டுவன் செய்த போர்களில் சிறப்பான தொரு போர் அவன் மேற்கொண்ட மோகூர்ப் போராகும். மோகூர் பாண்டிநாட்டில் மதுரைக்கு அண்மையில் இருந்தது. பிற்காலத்தில் வைணவத் திருப்பதியாக விளங்கிய திருமோகூரே இம்மோகூர் என்பர். மோகூர் மன்னன் பாண்டியர்க்குப் ப்டைத்தலைவனாக இருந்தான். மோகூர் மன்னனுக்கும் அறுகை என்னும் குறுநில மன்னனுக்கும் பகை இருந்தது. ஒருகால், போரில் அறுகை மன்னனை மோகூர் மன்னன் வென்றான். தோற்ற அறுகைக்கு நண்பனாக இருந்த செங்குட்டுவன் அறுகையின் சார்பில் மோகூர்மேல் படையெடுத்துச் சென்றான். மோகூர்ப் பழையன் அப்போரில் முற்றிலும் தோற்றான். அவன் காவல்மரமாகிய வேப்பமரத்தை வெட்டி அதனால் முரசு செய்து தன் நாடு திரும்பினான். இவ்வெற்றி பலராலும் பலவிடங்களிலும் சிறப்பாகப் பேசப்பட்டுள்ளது. அவற்றை ஒருங்கே காண்போம். நுண்கொடி யுழிஞை வெல்போர் அறுகை சேணன் ஆயினும் கேளென மொழிந்து புலம்பெயர்ந் தொளித்த களையாப் பூசற்று அரண் கடாவுறீஇ யணங்குநிகழ்ந் தன்ன மோகூர் மன்னன் முரசங் கொண்டு நெடுமொழி பணித்தவன் வேம்புமுதல் தடிந்து 65. மயிலை சினி. வேங்கடசாமி, சேரன் செங்குட்டுவன், ப. 31.