பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/560

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

563 _லைவனாம் இராவணனுடைய செருக்கு ஒழியும்படி வமானைக் கொண்டு எரிப்பித்தவனும், தில்லைத் திருச் அந்திரகடந் தன்னுள் இனிமையாய் எழுந்தருளியிருக்கிற அம்மானை - இராமபிரானைத் துதிக்கின்ற அடியார் களுடைய இணையடிகளையே துதிக்குந் தன்மையேன் ஆயினேன். ' (7) ஒலிக்கின்ற கடலை வெற்றி நிறைந்த அம்பைக் கொண்டு கலக்கும்படி எய்யத் தொடங்கி அதில் அணை கட்டி, அந்த அணை வழியாகக் கடல் கடந்து அக் கரை சேர்ந்து, எரிக்கின்ற நீண்ட வேற்படையையுடைய அரக்கர் களும் இலங்கையர் கோனாகிய இராவணனும் ஆகிய அனைவரின் இனிய உயிரைக் கவர்ந்து கொன்று, அவ் இராவணனுடைய தம்பியான விபீடணனுக்கு அரசைக் கொடுத்து, இலக்குமியின் அவதாரமான பிராட்டியுடனே இனிமையாகச் சேர்ந்த எல்லா வகைச் செல்வங்களு முடையவனும் தில்லைத் திருச்சித்திரகூடந் தன்னுள் தனது மேன்மை தோன்ற எழுந்தருளியிருப்பவனுமான இராம பிரானது திருவடிகளைத் தலைமேற் தாங்குதலாகிற அரசாட்சியைப் பெற விரும்புவனேயல்லாமல் அதற்கு மாறாக மற்ற அரசாட்சியை ஒரு பொருளாக மதிக்க மாட்டேன். ' (8) அழகிய உயர்ந்த பொன்னையும் இரத்தினங் களையுங் கொண்டு அமைக்கப்பட்ட மாட மாளிகைகளை யுடைய அயோத்தி மாநகருக்கு மீண்டுவந்து அரசாட்சியைப் பெற்று, தன்னால் முன்னர்க் கொல்லப்பட்ட இராவண னுடைய பெரிய பழைய கதைகளையெல்லாம் அகத்திய மாமுனிவன் வாயாற் சொல்லக் கேட்டு, மிதிலை நகரத்தில் தோன்றிய பிராட்டி உலக முழுவதும் வாழும்படி பெற்ற தன் மைந்தர்களான குச லவர்களுடைய சிவந்த பவளத் துண்டு போன்ற வாயினால் தனது சரித்திரமான இராமாயணத்தைக் கேட்டருளியவனான-தில்லைத் திருச்