பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/561

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

564 சித்திரகூடந் தன்னுள் எழுந்தருளியிருக்கிற எமது தலைவனுடைய சரித்திரத்தைக் காதினாற் கேட்டு, அப் பெருமானைக் கண்ணாற் கண்டு வணங்கப் பெறுவோம் யாம். அதுவேயன்றி இனிய அமுதத்தையும் ஒரு பொருளாக மதிக்கமாட்டோம் அல்லவா? (9) நிறைந்த தவத்தினையுடைய ச ம் புக ைன அவனிருக்குமிடந் தேடிச் சென்று தலையறுத்து, சிறந்த மறையோன் மகனின் உயிரை மீட்டுக் கொடுத்து, அகத்திய மாமுனிவன் கொடுத்த பெருவிலையுள்ள இரத் தினமாலையை அணிகலனாகச் சார்த்தியருளி, இலவணன் என்னும் அசுரனைத் தன் தம்பி சத்துருக்கனைக் கொண்டு கொன்று, துர்வாச முனிவனது சாபத்தால் திறல் விளங்கும் தன் தம்பி இலக்குவனைத் துறந்தவனும், தில்லைத் திருச் சித்திரகூடந் தன்னுள் எப்போதும் வசிப்பவனுமான இராமபிரானை மறவாமல் எப்போதும் துதிக்கின்ற மனத்தையுடைய நாம் இனித் துன்பத்தை அடைய மாட்டோம். ா. (10) தன்னடிச் சோதிக்கு எழுந்தருள்கிற அந்நாளில் அயோத்தி மாநகரிலுள்ள சங்கமம், தாவரமுமான எல்லா வுயிர்களையும் பரமபதத்திற்குப் போகச் செய்து, வலிமை யையுடைய பாம்புகளுக்குப் பகையான கருடன் மேல் ஏறிக் கொண்டு அசுரர்களை வெற்றி கொண்டு, வெற்றிச் செல்வி விளங்கப் பெற்ற அழகிய நீண்ட தனது திருக்கைகள் நான்கும் விளங்க, பரமபதத்திலுள்ளாரெல்லாம் எதிர் கொண்டு உபசரிக்கும்படி தனது பழமையான அப் பரம பதத்திலே போய்ச் சேர்ந்து, தன் மேன்மையெல்லாம் தோன்றும்படி இனிமையான சிங்காதனத்தில் எழுந்தருளி யிருந்த அம்மான் தன்னைத் தில்லைச் திருச்சித்திரகூடத் தில் எந்நாளும் நமக்காக வசித்தருளும் அப்பெருமான் இவ் இராமபிரானே என்றறிந்து துதித்து, அவனுக்கு அடியவர் களான நீங்கள் நாள்தோறும்-எப்பொழுதும் வணங்கி உய்வீர்களாக."