பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/562

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

565 (11) தில்லைநகர்த் திருச்சித்திரகூடந் தன்னுள் மெல் விளங்கும் அனுமானுடனே எப்போதும் உறையும் எம் பெருமானைக் குறித்து அழிவில்லாத புகழையுடைய தசரத சக்கரவர்த்தியின் குமாரனாய்ப் பிறந்தது முதல் பரமபதம் புக்கது இறுதியாக இராமாயண கதை முழுதையும் சங்கிரக மாக அமைத்து, பகைவர்களைக் கொல்லுதல் மேவிய படைக்கலன்களையுடைய சேனையையும் வெற்றியையும் ஒளியையுமுடைய வாளாயுதத்தையுமுடையவரும் உறையூரி லுள்ளார்க்குத் தலைவரும் வெண் கொற்றக் குடையை யுடையவருமான குலசேகராழ்வார் அருளிச் செய்த சிறந்த இயற்றமிழ் இலக்கணத்திற்கு இயைந்த இனிய தமிழ்ப் பிரபந்தமான இப் பத்துப் பாடல்களையும் கற்று வல்லவர்கள் பரமபதத்தில் விளங்குகிற நாரணனுடைய திருவடித் தாமரைகளிற் சேரப் பெறுவார்கள்.' இவ்வாறாகப் பத்தாந் திருமொழியினைக் கொல்லி நகர்க்கிறை கூடல் காவலன் கொடைக் குலசேகரன் தலைக் கட்டியுள்ளார். நூலாராய்ச்சி 1. திருமொழிகளின் உள்ளீடு பெருமாள் திருமொழியில் அமைந்துள்ள பத்துத் திருமொழியும் ஒவ்வோர் உள்ளிட்டினைக் கொண்டு எழுந்தவை. ஒவ்வொரு திருமொழியின் இறுதிப் பாட லிலும் குலசேகரர் அத்திருமொழி எப் பொருளைக் குறிக் கொண்டு எழுந்தது என்பதனைச் சொல்கின்றார். அவற்றை முறையே காண்போம். முன்னரே ஒவ்வொரு திருமொழியின் உள்ளிடும் விளங்க உரைக்கப்பட்டிருப்ப தால் ஈண்டுச் செய்யுட் பகுதி மட்டும் தரப்படுகின்றது,