பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/563

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

566 முதல் திருமொழி திரைவிளங்கு கரைப்பொன்னி நடுவு பாட்டுத் திருவரங்கத் தரவணையிற் பள்ளி கொள்ளும் கடல் விளங்கு கருமேனி யம்மான் றன்னைக் கண்ணாரக் கண்டுகக்குங் காதல் தன்னால் குடைவிளங்கு விறற்றானைக் கொற்ற வொள்வாட் கூடலர்கோன் கொடைக்குலசே கரன் சொற் செய்த நடைவிளங்கு தமிழ்மாலை பத்தும் வல்லார் கலந்திகழ்நா ரணனடிக்கீழ் கண்ணு வாரே." இரண்டாந் திருமொழி அல்லி மாமலர் மங்கை நாதன் அரங்கன் மெய்யடி யார்கள் தம் எல்லை யில்லடி மைத்தி றத்தினில் என்று மேவு மனத்தனாம் கொல்லி காவலன் கூடல் நாயகன் கோழிக் கோன்குல சேகரன் சொல்லி னின்றமிழ் மாலை வல்லவர் தொண்டர் தொண்டர்க ளாவரே. . மூன்றாம் திருமொழி அங்கை ஆழி அரங்கன் அடியினை தங்கு சிந்தைத் தனிப்பெரும் பித்தனாய்க் கொங்கர் கோன்குல சேகரன் சொன்ன சொல் இங்கு வல்லவர்க் கேதமொன் றில்லையே." 2 50. பெருமாள் திருமொழி; 1 : 1.1. 51. in 5 2 : 10. 52. 9 . 3 ככ.