பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/576

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

579. அம்பு நிறைந்த நீண்ட சாரங்கமாகிய வில்லினையும், வளைந்த பாஞ்சசன்னியம் என்ற சங்கினையும், பகை வரைக் கொலை செய்தலில் வல்ல சக்கராயுதத்தினையும் கெள மோதகி என்ற கதையினையும், வெற்றி பொருந்திய ஒளிவிடுகின்ற நாந்தகம் என்னும் வாளினையும் உடையவர் பெருமாள். காற்றுப் போலும் வேகமாகப் பறக்கின்ற பெரிய திருவடி என்னும் கருடாழ்வார் அரங்கத் தம்மானின் பக்கத்தே நின்று காவல் செய்கின்றார்: கோலார்ந்த நெடுஞ்சார்ங்கம் கூனற் சங்கம் கொலையாழி கொடுந்தண்டு கொற்ற வொள்வாள் காலார்ந்த கதிக்கருட னென்னும் வென்றிக் - * கடும்பறவை யிவையனைத்தும் புறஞ் சூழ் காப்ப 8 ச இப்பகுதியோடு,

  • உறகல் உறகல் உறகல் ஒண் சுட ராழியே சங்கே அறவெறி காந்தக வாளே அழகிய சார்ங்கமே

தண்டே இறவுபடாம லிருந்த எண்மர் உலோகபா லீர்காள் பறவை யரையா உறகல் பள்ளி யறைகுறிக் கொண்மின். ே என வரூஉம் பெரியாழ்வார் பாசுரமும் கருதத் தக்கது. இரண்டா ந் திருமொழியில், தேடிப் பெறுதற் கரிய வலிமையை அளிக்கும் தேன்போல இனிமையானவனை, தென்னரங்கத்தில் வாழ்பவனை, இலக்குமி விரும்பி யுறையும் வாட்டமில்லாத மாலையினை யணிந்த மார்பனை என்று அரங்கனை வருணிக்கின்றார் ஆழ்வார். 85. பெருமாள் திருமொழி: 1 ; 8 : 2.3. 86. பெரியாழ்வார் திருமொழி; 5 ; 2 : 9.