பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/578

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

581 மூன்றாந் திருமொழியில், அரங்கன் எல்லா அண்டங் அளிலும் வாழ்பவன் என்றும், பேய்முலைப் பால் உண்டவ னென்றும் குறிக்கப் பெறுகிறான்.

  • அண்ட வாணன் அரங்கன்வன் பேய்முலை

உண்ட வாயன். . முதலாகவுடையவன், ஆ ய ர் குலத்திலத்தினன், அரங்கன், அழகிய தாமரை மலரில் உறையும் இலக்குமியின் கொழுநன் என்று குலசேகரர் அரங்கனைக் குறிப்பிடு கின்றார்;

  • ஆதி ஆயன் அரங்கனங் தாமரைப்

பேதை மாமண வாளன். '92 நான்காந் திருமொழியில் அவ்வளவாக வருணனைக்கு இடமில்லை. இது போன்றே உவமைகள் வழிக் கருத்து விளக்கப் பெறுகின்ற ஐந்தாந் திருமொழியிலும் திருமால் வருண னைக்கு இடமில்லை. ஏழாந் திருமொழியில் கண்ணனுடைய பிள்ளைமை விளையாட்டுகள் குறிக்கப் பெறுகின்றன. செக்கச் சிவந்த ஆடையும், திருமுகமும், சிவந்த கோவைக்கனி போன்ற உதட்டினையும் குழல் முடி யினையும் உடையவன்.

  • செய்ய உடையுந் திருமுகமுஞ்

செங்கனி வாயுங் குழலும். . அடுத்து, மங்கலகரமாய்ப் பார்வைக்கு நன்கு தோற்று கிற வனமாலையானது மார்பிலே ஒளிவிட, மயிலிறகு களைச் சூடிக்கொண்டும், பளபள வென்ற மெல்லிய 91. பெருமாள் திருமொழி; 3 : 4 : 3.4. 92. பெருமாள் திருமொழி; 3 : 5 : 3.4. 93. பெருமாள் திருமொழி; 6 : 7 : 3.