பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/579

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

582. ஆடையை இடுப்பிலே சாத்திக் கொண்டும், அழகிய பூங்கொத்துகளைக் காதிலே செறிய அணிந்து கொண்டும். கண்ணன் அழகிய பெண்களுடன் தெருவிற் செல்வதாகக் குலசேகரர் குறிப்பிட்டுள்ளார்: == மங்கல நல்வன மாலை மார்பில் இலங்க மயிற்றழைப் பீலி சூடிப் பொங்கிள வாடை யரையிற் சாத்திப் பூங்கொத்துக் காதிற் புணரப் பெய்து. ஏழாந் திருமொழியில், ஆலையிலிட்டு ஆடத் தகுந்த நீண்ட கரும்பு போன்ற கண்ணன் என்றும், தாமரை மலர் போன்று விசாலமான திருக்கண்களையுடையவன் என்றும், கடலின் நிறம் போன்ற நிறத்தையுடையவன் என்றும், யானைக் குட்டி போன்றவன் என்றும், நறுமணம் மிக்க நீண்ட திருக்குழலையுடையவன் என்றும் கண்ண பிரான் குலசேகராழ்வாரால் வருணிக்கப்பட்டுள்ளான்:

  • ஆலை நீள்கரும் பன்னவன் தாலோ

அம்பு யத்தடங் கண்ணினன் தாலோ வேலை நீர்நிறத் தன்னவன் தாலோ வேழப் போதக மன்னவன் தாலோ ஏல வார்குழல் என்மகன் தாலோ. 9 மகிழ்ச்சியை விளைவிக்கும் நிறை நிலாவினை யொத்தம் திருமுகமும், திண்ணிதான திருக்கைகளும், திருமார்பும், வலிமை சான்ற திருத்தோள்களும், தளிரையும் மலரையு முடைத்தாய்க் கறுத்த திருக்குழ்ற் கற்றையும் பிறைநிலா போன்ற திருநெற்றியும், விசாலமான தாமரை போன்ற, திருக்கண்களும் கொண்டு இளமைப் பொலிவோடு கண்ண. பிரான் விளங்குவதாக ஆழ்வார் குறிப்பிடுகின்றார்: H or 94. பெருமாள் திருமொழி: 6 : 9 : 1-2. 95. பெருமாள்.திருமொழி; 7 : 1 : 1.3.