பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/580

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

583. ' களிகி லாவெழில் மதிபுரை முகமும் கண்ணனே திண்கை மார்புந்திண்டோளும் தளிர்ம லர்க்கருங் குழற்பிறை யதுவும் தடங்கொள் தாமரைக் கண்களும் பொலிந்த இளமை யின்பத்தை எட்டாந் திருமொழி தாலாட்டாய் அமைந்துள்ளது. அங்கு விவரமான வருணனைக்கு இடமில்லை. ஒன்பதாந் திருமொழி தசரதன் புலம்பலாய் அமைந் துள்ளது. அங்கும் விரிந்த வருணனைக்கு இடமில்லை. பத்தாந் திருமொழியில் இராமன் சூரிய குலத்திற்கோர் விளக்கு என்று குறிக்கப் பெற்றுள்ளான் :

  • வெங்கதிரோன் குலத்திற்கோர் விளக்கு. ??

சிவந்த நீண்ட பெரிய கண்களையும் கருமையான மேகத்தைப் போன்ற மேனியினையும் உடைய இராமன் என்று குலசேகரர் குறிப்பிடுகின்றார் :

செங்கனெடுங் கருமுகிலை இராமன் தன்னை." 8

இவ்வாறு குலசேகரர் தம் பாடல்களில் திருமாலினைத் திறம்படப் பலவிடங்களில் வருணித்துள்ளார். ᏙᎥᎥ { . இராமாவதாரச் செய்திகள் குலசேகரர் இராமாவதார நிகழ்ச்சிகளிற் பெரிதும் ஈடுபட்டவர். இராம காதை படிப்பதைக் கேட்கும்போது அக் கதை நிகழ்ச்சியில் ஒன்றிய உணர்வுடையர் ஆகி விடுவார் என்று அவர் வரலாறு நமக்கு உணர்த்துகின்றது. எனவே தம் பெருமாள் திருமொழியிற் பலவிடங்களில் இராமாவதாரத்தைப் பற்றிய செய்திகளைப் பாங்குறக் குறிப்பிட்டுள்ளார். அவற்றைக் காண்போம்: 96. பெருமாள் திருமொழி; 7 : 4 : 1.3. 97. பெருமாள் திருமொழி; 10 : 1.2. 98. பெருமாள் திருமொழி; 10 : 1.3.