பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/581

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

584 எட்டாந் திருமொழி இராமாவதாரத்தில் நற்றாயான கோசலையார் பெற்ற பேற்றையும் மற்ற வீரச் செயல் களையும் நினைந்து இராமபிரானது இளமைப் பருவத்தைத் தாலாட்டு முகத்தாற் கொண்டாடும் போக்கில் அமைந் துள்ளது. நிலைத்த புகழுடைய கோசலையின் அழகிய திரு வயிற்றிற் பிறந்தவன்; தென்னிலங்கைக்குத் தனி வேந்த னாகிய இராவணனின் பத்துத் தலைகளையும் முடி களையும் சிதறும்படி செய்தவன். இவ்வாறு இராமன் கூறப்படுகிறான்: o * மன்னுடிகழ்க் கோசலைதன் மணிவயிறு வாய்ந்தவனே தென்னிலங்கைக் கோன் முடிகள் சிந்துவித்தாய். இயக்கியாயிருந்து அகத்திய சாபத்தால் அரக்கியாய்க் கொடுமையிழைத்து வந்த வலிய ஆற்றல் வாய்ந்த தாடகையின் மார் பின் மீது அம்பையெய்து அவ்வம்பு முதுகின் வழியே வெளியேறச் செய்ய வில்லை வளைத்தவன் இராமன் என்பது, i.

  • திண்டிறலாள் தாடகைதன்

உரமுருவச் சிலைவளைத்தாய்' என்ற தொடரால் வெளிப்படுகின்றது. நிறைந்த பெரும் புகழுடைய சனக சக்கரவர்த்தியின் மருகன் என்பதனையும் தசரதனுடைய புதல்வன் என்பதனையும்,

  • தங்குபெரும் புகழ்ச்சனகன்

திருமருகா தாசரதி' என்ற தொடரால் அறிகின்றோம். 99. பெருமாள் திருமொழி; 8 : 1-2 100. பெருமாள் திருமொழி: 8 : 2:2. 101. பெருமாள் திருமொழி; 8 : 3:2