பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/582

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

585 அடுத்த பாடலில்,

  • மைதிலி தன் மணவாளா !” என்று இராமனைக் குறித்துள்ளார்.

நிலவுலகம் முழுதும் பெரிய அரச செல்வத்தினைப் பரதனுக்கே தந்துவிட்டு, புகுதற்குப் பொல்லாங்கு விளைவிக்கும் அருமையான காட்டிற்குப் பேரன்பு பாராட்டும் இளையாழ்வாராம் இலக்குவனோடு சென்ற வீரமும் வெற்றியுஞ் செறிந்த மார்பனே என்று இராமனைப் பாராட்டியுள்ளார்:

  • பாராளும் படர்செல்வம்

பரதநம்பிக் கேயருளி ஆராவன் பிளையவனோ டருங்கானம் அடைந்தவனே." இராமபிரான் காடேகும் பிரிவிற்காற்றாது அயோத்தி வாழ் மக்களெல்லாம் அவன் பின் வனந் தொடர்ந்த வரலாறு பின்வரும் அடியிற் சுட்டப்படுகின்றது:

  • சுற்றமெலாம் பின் தொடரத்

தொல்கானம் அடைந்தவனே.' இச் செய்தியினையே சி ல ப் ப தி கா ர ஆசிரியர் இளங்கோவடிகள், பெருமக னேவ லல்ல தியாங்கனும் அரசே தஞ்சமென் றருங்கா னடைந்த அருந்திறல் பிரிந்த அயோத்தி போல பெரும்பெயர் மூதூர் பெரும்பே துற்றதும் ' என்று தம் காப்பியத்தில் குறிப்பிட்டுள்ளார். - --- 102. பெருமாள் திருமொழி; 8 : 4-2. 103. பெருமாள் திருமொழி; 8; 5 : 1-2. 104. பெருமாள் திருமொழி; 8 : 6.1. 105. சிலப்பதிகாரம்; புறஞ்சேரியிறுத்த காதை : 63-64.