பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/583

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

586 வாலியைக் கொன்று குரக்கரசினை வாலிக்கு இளைய வனாம் சுக்கிரீவனுக்குத் தந்த செய்தி, " வாலியைக்கொன் றரசிளைய வானரத்துக் களித்தவனே ே என்ற அடியில் சுட்டப்படுகின்றது. மலைகளைக் கொண்டு சேது அணை கட்டி அதன்வழி இலங்கை நகர் சென்று அரணை அழித்த செய்தி, ': மலையதனால் அணைகட்டி மதிளிலங்கை அழித்தவனே' என்ற தொடரால் பெறப்படுகின்றது. அடுத்த பாடலிலும் இலங்கையை அழித்த செய்தி பேசப்படுகின்றது:

  • வளையவொரு சிலையதனால்

மதிளிலங்கை அழித்தவனே. ' ஒன்பதாந் திருமொழி, இராமனது இளமைச் செயல் களைக் காணும் பேறு தசரதனுக்கு வாய்க்காமையை நினைந்து தன் மகன் இராமன் காடு நோக்கிச் சென்ற பிரிவாற்றாமையை நினைந்து தசரதன் புலம்பிய வருத்தத்தினைக் கொண்டு மொழிவதாகும். | கொடிய வாக்கை யுடையவனான நான் கூறிய சொல்லைக் கேட்டு, களிறு, தேர், குதிரை முதலியன வொழிந்து வேல் நெடுங்கண் மங்கை சீதையோடும் இளையவனாம் இலக்குவனோடும் சென்றாயே என்று தசரதன் புலம்புகின்றான் : _ 106. பெருமாள் திருமொழி; 8 : 7 107. பெருமாள் திருமொழி; 8 : 8 108. பெருமாள் திருமொழி; 8 : 9 2. 1. 2.

H H