பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/584

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

587

வெவ்வாயேன் வெவ்வுரைகேட் டிருகிலத்தை

வேண்டாதே விரைந்து வென்றி மைவாய களிறொழிந்து தேரொழிந்து மாவொழிந்து வனமே மேவி நெய்வாய வேனெடுங்கண் நேரிழையும் இளங்கோவும் பின்பு போக எவ்வாறு நடந்தனையெம் இராமாவோ எம்பெருமான் என் செய் கேனே.' அரண்மனையில் மெல்லிய பஞ்சணையின் மேல் துயின்ற: நீ, இனிக் காட்டில் மரநிழலில் கல்லணையின் மேல் துயிலப் போகின்றாயே என்று தசரதன் அலமந்தான். மெல்லணைமேல் முன்துயின்றாய் இன்றினிப்போய் வியன்கான மரத்தின் கீழற் கல்லணைமேற் கண்டுயிலக் கற்றனையோ காகுத்தா கரிய கோவே. ' சீதையைக் க டி ம ன ங் கொள்ளும் பொருட்டுச் சிவனுடைய வில்லை முறித்த செய்தி, -

  • = * * வேய்போலு மெழிற்றோளி தன்பொருட்டா - விடையோன்றன் வில்லைச் செற்றாய்' என்ற தொடரால் அறியப்படுகின்றது.

செருக்குக்கொண்ட, சத்திரிய குலத்தை வேரறுக்க வேண்டும் என்று உறுதி கொண்டிருந்த பரசுராமனுடைய வில்லை யொடித்து அவனுடைய தவத்தினை முற்றும் பெற்றவன் இராமன் என்பது, - -

  • முன்னொருநாள் மழுவாளி சிலைவாங்கி

அவன் தவத்தை முற்று ஞ் செற்றாய்' என்ற தொடரால் தெரியவருகின்றது. 109. பெருமாள் திருமொழி; 9 : 2. காக 110. பெருமாள் திருமொழி; 9 : 3 : 3.4. 111. பெருமாள் திருமொழி; 9 : 4 : 2. 112. பெருமாள் திருமொழி; 9 : 9 : 1.