பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/585

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

588 கோசலையும் சுமித்திரையுந் துன்பமடைய, கொடிய கூனி சொற்கேட்டுக் கைகேயி சொன்ன மொழியைத் தேறி வளநகரைத் துறந்து வன்காடு சென்றனையே இராமா என்று தசரதன் புலம்புகின்றான்: " தேனகுமா மலர்க்கூந்தற் கோசலையுஞ் சுமித் திரையுஞ் சிந்தை நோவக் கூனுருவிற் கொடுங் தொழுத்தை சொற்கேட்ட கொடியவள் தன் சொற் கொண் டின்று கானகமே மிகவிரும்பி நீ துறந்த வளநகர். 18 அங்கணெடுமதில் என்னும் பத்தாந் திருமொழி முற்றும், இராமபிரான் அவதாரம் தொடங்கிப் பரந்தாமம் எழுந்தருளிய அ ள வு ம் நடந்த அருஞ்செயல்களை விவரிப்பதாகும். சுருங்கச் சொன்னால் இராம காதை சுருக்கமாக இங்கு விளக்கப்பட்டுளது எனலாம். தாடகையின் மார்பை அம்பாற் பிளந்து குருதியை வெளிப்படுத்தியது, விசுவாமித்திரருடைய வேள்விக்கு இடையூறு செய்த சுபாகு முதலிய அரக்கர்களுடைய உயிரைக் கொள்ளை கொண்டது ஆகிய செயல்கள் இரண்டாம் பாடலிற் குறிப்பிடப் பெறுகின்றன. ' வந்தெதிர்ந்த தாடகைதன் உரத்தைக் கீறி வருகுருதி பொழிதரவன் கணையொன்றேவி மந்திரங்கொள் மறைமுனிவன் வேள்வி காத்து வல்லரக்க ருயிருண்ட மைந்தன். ' சீதையின் பொருட்டுச் சிவன் தி ரு வி ல் ைல யொடித்ததும், மழுவேந்திய பரசுராமன் கை வில்வாங்கி முறித்து, அதன் வழி சத்திரிய குல மன்னர்களின் பகையைத் தீர்த்ததும் ஆன செயல்கள், 113. பெருமாள் திருமொழி; 9 : 10 : 1.3. 114. பெருமாள் திருமொழி; 10 : 2 : 1.2.